ஸாராஹ் மாலினி பெரேரா என்ற முஸ்லிம் பெண்
ஸாராஹ் மாலினி பெரேரா என்ற முஸ்லிம் பெண் இலங்கையை சேர்ந்த புத்த மத குடும்பத்தில் பிறந்து புத்த குடும்பத்தில் வளர்ந்த சிங்கள இன பெண் இவர் இஸ்லாத்தை டிஸ்கவர் இஸ்லாம் நிகழ்ச்சிகளின் ஊடாக் கற்றதன் மூலம் 1999 இல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் இவர் தற்போது பஹ்ரைன் நாட்டின் பாடசாலை ஒன்றின் ஆசியராக தொழில் புரிகிறார்
இவர் விடுமுறையில் இலங்கை வந்து இஸ்லாம் மற்றும் ஏனைய மதங்கள் பற்றி ஒப்பிட்டு ஆய்வு செய்து இரண்டு புத்தகங்களை சிங்கள மொழியில் பதிப்பு செய்துள்ளார் இந்த புத்தகங்கள் புத்த மதத்தை நித்திப்பதாக கூறி மிரிஹான போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கபட்டுள்ளார்
இவரின் சகோதரி மரியம் இது பற்றி கூறுகையில் இவர் இஸ்லாத்தை தழுவி கொண்ட கால பகுதியில் இருந்து இஸ்லாத்தையும் மற்ற மதங்களையும் ஒப்பிட்டு நூல் ஒன்றை எழுதிகொண்டிருந்தார் என்றும் எழுதும் பணி கடந்த வருடம் நிறைவடைந்ததாகவும் -2009 - விடுமுறையில் இலங்கை சென்ற ஸாராஹ் மாலினி பெரேரா தனது சிங்கள மொழி புத்தகங்களான ஒன்று From Darkness to Light இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு என்ற தலைப்பிலும் இரண்டாவது Questions and Answers கேள்விகளும் பதில்களும் என்ற தலைப்பிலும் எழுதியிருந்தார் அவற்றை புத்தகங்களாக பதிப்பு செய்து அவற்றில் ஒரு பகுதியை கார்கோ முகவர் ஒன்றின் ஊடாக அனுப்பும் வேளையில் குறித்த கார்கோ முகவர் நியையத்தின் உரிமையாளர் போலீசாரை அழைத்து இந்த புத்தகங்கள் லார்ட் புத்தாவுக்கு எதிரானவை என்று முறையிட்டுள்ளார் இவர் தீவிர இனவாத அமைப்பான சின்ஹல உரிமையவுடன் தொடர்பு கொண்டவராக இருக்கலாம் என்று மரியம் கூறியுள்ளார்
மேலும் இவர் கூறும்போது குறித்த இனவாதிகள் ஸாராஹ்வின் வழக்கை நீதிமன்றத்துக்கு பாரம் கொடுபதற்கு முன்னர் 24 மணித்தியாலங்கள் போலீஸ் காவலில் வைக்க போலிசை நிற்பந்திபதாகவும் கூறியுள்ளார் ,
இந்த விடையம் தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகள் , முஸ்லிம் அரசியல் வாதிகள் ,பொது அமைப்புகள் , மனித உரிமை அமைப்புகள் தலையிட்டு ஸாராஹ்வின் விடுதலைக்கு உடன் உதவ வேண்டும்
ஸாராஹ் ஆசிரியர் தொழில் புரிவதற்கு முன்னர் பஹ்ரைன் நாட்டின் நிலை கொண்டுள்ள அமெரிக்கன் கடல் படையில் கணக்காலராகவும் தொழில் புரிந்துள்ளார் இவரின் பெற்றோர் சகோதரிகள் அனைவரும் வெவ்வேறு கால கட்டங்களில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் இவரின் குடும்ப உறுபினர்களான தந்தை நோர்பெத் பெரேரா , தாய் சோமா, சகோதரிகள் பட்மா , ரஸா. பட்மணி ,மாலினி இவர்கள் குடும்பமாக பஹ்ரைன் நாட்டில் வசிகின்றார்கள் ஸாராஹ்வின் தந்தை சில மாதங்களுக்கு முன்னர் வபாதாகியுள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் www.gulf-daily-news.com என்ற பஹ்ரைன் நாட்டின் இணையத்தளத்தில் இன்று வெளியான விபரங்கள்
http://usa-learning.blogspot.com/2010/03/blog-post_25.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக