மார்ச் 13 ஆம் திகதி இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் தமிழ் நாட்டுக்கு வந்திருந்தனர். சட்ட மன்ற கட்டடதொகுதியினை திறந்து வைப்பதற்காகவே சோனியா காந்தி, மன்மோகன் சிங்க் ஆகியோர் வந்தனர்.
இவர்களின் வருகையினை ஒட்டி விசேட வேவுகள், தரவு சேகரிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. வழமையாக எதற்கெடுத்தாலும் புலிகள் மீது பழி சுமத்தும் எண்ணம் எள்ளளவும் இந்திய பிசாசுகளுக்கு விட்டுபோகவில்லை. ஆகையால் சோனியா காந்தி, மன்மோகன் சிங்க் ஆகியோர் வரும் காலப்பகுதியில் புலிகள் யாராவது ( ஈழ தமிழர்கள்) அந்த பகுதிக்கு புதிதாக வந்துள்ளார்களா என பொலிசார் துருவி துருவி விசாரித்ததில் 06 ஈழத்தமிழர் வலசரபாக்கத்திற்கு வந்துள்ளதை மணந்து பிடித்துள்ளனர். இவர்களுக்கு புலிசாயம் இட்டு வழமையாக தங்களின் விசாரணைகள், கட்டுக்கதைகள், புரளிகள் ஆகியவற்றை தயார் செய்து அதிகாரிகளுக்கும் அனுப்பி கொண்டிருக்கும் வேளையில் தான் இன்னும் அதிர்ச்சிகரமான தகவல்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.
அதாவது புலிகளின் சற்றலைட் தொலைபேசிகளை ஒட்டுகேட்பதற்காக பொலிசார் சற்றலைற் போன் ஒட்டுக்கேட்கும் கருவியினை இயக்கி கொண்டிருந்தவேளை மூன்று சற்றலைட் போன்கள் இயக்கத்தில் உள்ளதனை கண்டுபிடித்துள்ளனர். மூன்றினது அமைவிடங்களையும் தேடியபோது அந்த மூவரும் இஸ்ரேல் நாட்டினை சேர்ந்தவர்கள். பிரதமரும், சோனியாவும் தமிழ் நாட்டிற்கு வரும் வேளை இந்த மூன்று இஸ்ரேலியர்களுக்கு தமிழ் நாட்டில் என்ன வேலை? அதுவும் சற்றலைட் போனை மூவரும் வைத்திருந்ததற்கான காரணம் என்ன? விசாரணையில் அவர்கள் தாம் உல்லாசபயணிகள் என உளறியுள்ளனர் ஆனால் விசாரணை தொடர்கின்றதாம்.
அடுத்ததாக வந்த தலையிடி அமெரிக்காவுக்கு அனுப்பவென பொதி செய்யப்பட்டு இருந்த பெட்டகம் ஒன்றினை சுங்க பொலிசார் பரிசோதித்த போது அதற்குள் பல பாதுகாப்புடன் தொடர்பான வரைபடங்கள் புளூ பிரின்ற்கள் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பொதி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான கேணல் ஹூ ஏ மேளி என்பவரால் அமெரிக்காவில் உள்ள ஒருவருக்கு முகவரி இடப்பட்டு பதிவு செய்யபட்டு இருந்தது.
இது தொடர்பாகவும் விசாரணைகள் நடக்கின்றனவாம்.
ஓ நாய்கள் புலிவேட்டையினை கைவிட்டுவிட்டு நரி வேட்டைகளில் இறங்குவதே நல்லது ஏனெனில் புலிகள் அங்கு இல்லை, இருந்தாலும் ஆபத்து இல்லை. நரிகளே அங்கு அதிகம் என்பதனை இப்போது புரிந்து கொள்ளுமா ஓ நாய்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக