இலங்கையில் விடுதலைப் புலிகள் பயன் படுத்திய ஆயுதங்கள், கடல் மார்க்கமாக தமிழகத்திற்குள் கடத்தி வரப்படுகின்றன எனக் கிடைத்த தகவலின்படி கியூ பிரிவுப் பொலிஸார் கடலோரப் பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இராமநாதபுரம்,மார்ச் 25
இலங்கையில் விடுதலைப் புலிகள் பயன் படுத்திய ஆயுதங்கள், கடல் மார்க்கமாக தமிழகத்திற்குள் கடத்தி வரப்படுகின்றன எனக் கிடைத்த தகவலின்படி கியூ பிரிவுப் பொலிஸார் கடலோரப் பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின் னர் அங்கு விடுதலைப் புலிகள் வைத்திருந்த ஆயுதங்கள் பல்வேறு இடங்களில் புதைக்கப்பட்டிருக்கின்றன எனவும், அவற் றைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர், முகவர்களின் உதவியுடன் தமிழகத்திற் குக் கடத்தி வருகின்றனர் எனவும் தகவல்கள் வந்துள்ளன.
இந்த ஆயுதங்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றனவா, தீவிரவாத செயல் களுக்கு பயன்படுகின்றனவா என்பது தெரி யாமல் பொலிஸாரும் குழப்பத்தில் உள்ளனர்.
இதுகுறித்து கியூ பிரிவு அதிகாரி ஒரு வர் கூறியவை வருமாறு
தமிழகத்திலிருந்து ஆயுதம் தயாரிக்கத் தேவையான பொருள்களை முன்பு இலங்கைக்குக் கடத்தினர். தற்போது இலங்கை யில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களை இங்கு கடத்தி வருகின்ற னர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கீழக் கரையில் ஹவாலா பணத்துடன் பிடிபட்ட நபரிடம் கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் இலங்கையிலிருந்து வந்தவை எனத் தெரியவந்தது. மேலும் சிலர், இதுபோன்ற கடத்தலில் ஈடுபடுகின்றனர் எனத் தெரிகி றது. அவர்கள் குறித்து ரகசியமாக கண் காணித்து வருகிறோம். இங்கு எதற்குக் கடத் துகின்றனர் என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக