சென்னை, மார்ச் 24: இணையதளத்தில் எழுதுபவர்களால் தமிழ் சீரழிக்கப்படுவதாக தமிழ் ஆர்வலர்களும், பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இன்றைய நவீன உலகில் இணையதளம் என்பது வாழ்க்கையின் ஓர் அங்கமாகி விட்டது. எதில் எந்த சந்தேகம் வந்தாலும் உடனடியாக எல்லோரும் இணையதளத்தையே நாடுகின்றனர்.
தொடக்க காலத்தில் இணையத்தில் ஆங்கிலம் மட்டுமே இருந்தது. தமிழ் உள்பட பிற மொழிகளை இணையத்தில் காண்பது அரிதாகவே இருந்தது. இப்போது தமிழ் உள்பட எந்த மொழியிலும் எழுதுவதற்கும், படிப்பதற்கும் புதிது புதிதாக மென்பொருள்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இணையதள தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவும் தமிழில் வரத் தொடங்கியுள்ளது. அதனால் தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் கூட இணையம் மூலம் தேவையான தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது.தமிழில் ஏராளமான இணையதளங்கள் உள்ளன. தினமும் பல தளங்கள் தமிழில் வந்து கொண்டிருக்கின்றன. அரசுத் துறைகள், நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் மட்டுமல்லாது பல தனி நபர்களும் தங்களை இணையதளம் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
சிற்றிதழ்கள் மூலம் தங்களை மெல்ல மெல்ல எழுத்தாளர்களாக வளர்த்துக் கொண்டவர்கள் இன்று இணையதளம் மூலம் வாசகர்களை வலைவீசி பிடித்து வருகின்றனர். எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன் போன்றவர்களின் இணையதளங்கள் பிரபலமாக உள்ளன.
இணையத்தில் தமிழ் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அதில் எழுதுபவர்களால் தமிழ் சீரழிக்கப்படுகிறது என்று பெரும்பாலானவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இணையத்தில் ஒரு தகவலைப் பெற விரும்பினால் அனைவரும் கூகுள் தேடு பொறியை நாடுகின்றனர். அதன் மூலம் தேவையான தகவல்களை பெறுகின்றனர். ஆனால் கூகுள் தேடு பொறியில் ஏதாவது தமிழ் எழுத்தை தட்டினால் அது பட்டியலிடும் செய்திகள் 90 சதவீதம் ஆபாசம் நிறைந்தவைகளாக உள்ளன.அம்மா - மகன், அப்பா - மகள் போன்ற வார்த்தைகளை இட்டு தேடினால் கூட ஆபாசக் கதைகளே வருகின்றன. அந்த அளவுக்கு இணையத்தில் தமிழ் ஆபாசக் கதைகள் நிறைந்துள்ளன என்று பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் ஆபாசக் கதைகள் இருந்தாலும் தமிழ் அளவுக்கு இல்லை. அப்பா - மகள் போன்ற தலைப்புகளில் கூட ஆபாசக் கதைகள் இருப்பதால் அதனைத் தடுக்கவும் வாய்ப்பில்லை. இது போன்ற கதைகளை படிப்பதால் இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் ஒருவித மனக்குழப்பத்துக்கு ஆளாகிறார்கள் என்கிறார்கள் டாக்டர்கள்.
எனவே இதுபோன்ற விஷயங்களையும் சைபர் கிரைம் போலீஸôர் கண்காணிக்க வேண்டும். அதுபோல தமிழில் 'பிளாக்' எழுதுபவர்கள் தனி மனித தாக்குதல்களிலும், மதங்களை இழிவுப்படுத்தி எழுதியும் வருகின்றன. பல நேரங்களில் இவர்கள் எழுத்துக்கள் மூலம் மோதி வருகின்றனர். இதனால் சமூக அமைதி குலையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.எனவே சைபர் கிரைம் போலீஸôர் இணையத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி
வணக்கம்
பதிலளிநீக்குநல்ல பதிவு. இது தொடர்பாக நானே ஒரு பதிவு எழுத வேண்டும் என்று இருந்த நேரத்தில் தான் தங்கள் பதிவை படித்தேன். கூகிள் தேடுதல் பொறியை தமிழ் பயன்படுத்திய எல்லோரும் வேதனை அடைத்து இருப்பார்கள்.
நன் எப்போது தவகல்கள் சேகரித்துக்கொண்டு இருக்கிறேன். தமிழில் மட்டும் தான் எப்படி வருகிறதா எல்லை மலையாளம் ஹிந்தி கர்நாடகம் தெலுங்கு எல்லாவற்றிலும் எப்படி தான் வருகிறதா என்று.
அன்புடன்
ரத்தினம் பத்மநாபன்