இணையத்தளங்களில் என் பழைய படங்கள் மட்டுமே வந்துள்ளன. என்னை பற்றிய வேறு படங்கள் எதுவும் வெளிவந்தால் அதை போலீசார்தான் தடுக்க வேண்டும் என்று நடிகை யுவராணி கூறியுள்ளார்.
நடிகை ரஞ்சிதாவைத் தொடர்ந்து, நித்யானந்தனுடன் நடிகை யுவராணியை இணைத்து தெலுங்கு சேனல்கள் பரபரப்பாக செய்திகளையும் சில படங்களையும் வெளியிட்டன. நித்யானந்தனுடன் யுவராணி உள்ள ஆபாச வீடியோ வெளியாகி உள்ளதாக அந்த செய்திகளில் கூறப்பட்டது. ஆனால் இதுவரை வீடியோ எதுவும் வெளிவரவில்லை.
இந் நிலையில் நித்யானந்தனுடன் தான் இருப்பது போன்ற படங்களோ, வீடியோ வெளிவராமல் போலீசார் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையோடு யுவராணி சென்னை போலீஸ் கமிஷனரை நேற்று சந்தித்தார். அவருடன் அவர் சார்ந்த சாதிச் சங்கப் பிரமுகர்களையும் அழைத்து வந்திருந்தார்.
நேற்று மாலை 6.30 மணியளவில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் வெளியில் வந்த அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நித்யானந்தாவோடு என்னை இணைத்து கூகுள், யு டூப் ஆகிய இணையத்தளங்களில் செய்திகள் வெளியானதாக எனது உறவினர்கள் எனக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக நானும் அந்த இணையத்தளங்களை பார்த்தேன். அதில், தவறான படங்கள் எதுவும் வெளியாகவில்லை. என்னுடைய பழைய படங்கள்தான் வெளியாகியுள்ளன.
இனி என்னைப் பற்றிய வேறு தவறான படங்கள் எதுவும் வெளிவந்தால் அதைத் தடுக்க வேண்டும் என்று கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். தனிப்பட்ட முறையில் நான் யார் மீதும் புகார் கொடுக்கவில்லை. கமிஷனரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
என்னுடைய கணவரோடு கலந்து பேசி விரைவில் பத்திரிகை நிருபர்களை சந்தித்து விளக்கமாக பேட்டியும் கொடுப்பேன் என்றார் யுவராணி
பழைய நடிகைகளுக்கு ரி என்ட்ரி க்கு நடக்கும் விளம்பரமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக