இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 மார்ச், 2010

பொட்டு அம்மான் இறந்ததாக அறிவிக்க இன்டர்போலுக்கு இலங்கை நெருக்குதல்

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் இறந்து விட்டதாக அறிவிக்க வேண்டும். அவரது பெயரை தேடுவோர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என இன்டர்போலுக்கு இலங்கை [^] அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

பொட்டு அம்மான் குறித்து எந்தவிதத் தகவலும் இதுவரை இல்லை. அவர் உயிருடன் இருப்பதாக ஒரு தகவலும், இறந்து விட்டதாக இலங்கை அரசின் தகவலும் கூறி வருகின்றன.

இறந்து விட்டதாக இலங்கை கூறினாலும், பொட்டு அம்மானின் உடல் மீட்கப்படவில்லை.

பொட்டு அம்மான் உயிருடன் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக இந்திய உளவுத்துறையான ரா நம்புகிறது. அவரைத் தேடியும் வருகிறது. அதேபோல இன்டர்போல் அமைப்பும் பொட்டு அம்மானைத் தொடர்ந்து தேடி வருகிறது.

இந்த நிலையில் திடீரென சில நாட்களுக்கு முன்பு பொட்டு அம்மானும், அவரது மனைவியும் உடலில் குண்டுகளைக் கட்டிக் கொண்டு, போரின் இறுதி நாளின்போது தற்கொலை செய்து கொண்டதாக இலங்கை கூறியது.

இதைத் தொடர்ந்து தற்போது பொட்டு அம்மான் இறந்து விட்டதாக இன்டர்போல் அறிவிக்க வேண்டும் எனவும் இலங்கை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இலங்கை ராணுவ உளவுப் பிரிவு தலைவர் கபிலா ஹெண்டவிதரனா கூறுகையில், பொட்டு அம்மானை இறந்தவராக கருதி, தேடப்படுவோர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என இன்டர்போலைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

பொட்டு அம்மான் இறந்து விட்டதாக உறுதியாக நம்புகிறோம் என்று கூறினார்.

பொட்டு அம்மான் விஷயத்தில் திடீரென இலங்கை அரசு இவ்வளவு அவசரம் காட்டுவதற்கான காரணம் புரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக