இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 29 மார்ச், 2010

ஒபாமா திடீர் ரகசிய ஆப்கானிஸ்தான் பயணம்

காபூல்: அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்றிரவு திடீரென ஆப்கானிஸ்தான் வந்தார்.

நேற்று முன் தினம் மேரிலாண்ட் சென்ற ஒபாமா அங்கிருந்து ஆப்கானிஸ்தானுக்கு புறப்பட்டார். பாதுகாப்பு காரணங்களையொட்டி அவரது பயணம் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

காபூல் விமானப் படைத் தளத்தில் தரையிறங்கிய அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் மாளிகைக்குச் சென்றார்.

அவரது வருகை சில மணி நேரத்துக்கு முன்னர் தான் கர்சாய்க்கே தெரிவிக்கப்பட்டது.

கர்சாயை சந்தித்த ஒபாமா ஆப்கானிஸ்தானி்ல் தலைவிரித்தாடும் லஞ்ச- ஊழலை ஒழிக்கவும், போதை மருந்து கடத்தலை தடுக்கவும் கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

பின்னர் அங்கேயே அமெரிக்க படை வீரர்களை சந்தித்துப் பேசிய ஒபாமா அடுத்த சில மணி நேரங்களில் காபூலில் இருந்து அமெரிக்கா கிளம்பினார்.

பதவியேற்ற பின் போர் பிராந்தியத்துக்கு ஒபாமா செல்வது இது இரண்டாவது முறையாகும். முன்பு ஈராக்குக்கும் இதே போல திடீரென ரகசிய பயணம் மேற்கொண்டார் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் பிரதமரை அவமானப்படுத்தினாரா ஒபாமா?:

இந் நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை ஒபாமா அவமானப்படுத்திவிட்டதாக இஸ்ரேலில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

பாலஸ்தீனத்தில் தான் ஆக்கிரமித்துள்ள மேற்கு ஜெருசலேம் பகுதியில் யூதர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை இஸ்ரேல் சமீபத்தில் தொடங்கியது.

இத் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொடங்கி வைத்தார். இதற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அமெரிக்கா-இஸ்ரேல் இடையே பேச்சுவார்த்தை நடக்க இருக்கும் நிலையில் இத் திட்டத்தை இஸ்ரேல் தொடங்கியதை அவர் கண்டித்தார்.

ஆனால் இந்த எதிர்ப்பை இஸ்ரேல் நிராகரித்தது.

இந் நிலையில் அமெரிக்கா சென்ற நெதன்யாகு, அதிபர் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது அவரை ஒபாமா மிகக் கடுமையாக கண்டித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பின்போது இரு தலைவரும் போட்டோ எடுத்துக் கொள்ளும் சம்பிரதாயமும் நடைபெறவில்லை.

மேலும் ஒபாமா-நெதன்யாகு பேச்சு விவரங்களையும் பத்திரிகையாளர்களுக்கு வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

இதன் மூலம் நெதன்யாகுவை ஒபாமா அவமானப்படுத்திவிட்டதாக இஸ்ரேலிய இணையத் தளங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஆனால், இதை அமெரிக்கா மறுத்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், இஸ்ரேல் எங்கள் நெருங்கிய நட்பு நாடு. நட்பு நாடுகளுக்கு இடையே இதுபோன்ற சம்பிரதாயங்கள் எல்லாம் தேவையில்லை. அதனால் தான் அவை தவிர்க்கப்பட்டன. மற்றபடி இஸ்ரேல் பிரதமர் அவமானப்படுத்தப்பட்டார் என்பதெல்லாம் தவறான பிரச்சாரம் என்றார்.

ஞாயிறு, 28 மார்ச், 2010

தற்பொழுதுதான் யதார்த்தமான யுத்தம் ஆரம்பிக்கிறது! இதில் பங்கெடுங்கள்! – பிரய்ன் செனிவரத்னா

‘தமிழீழம்’ மீதான பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் கிடைத்த மகத்தான ஆணையைப்பற்றிப் பிரெய்ன் செனிவரத்னா, ‘இத்தனை வருடங்களாக நான் ஈடுபட்ட போதிலும் இத்தகைய தீர்ப்பினால் நான் பிரமிப்பு அடைந்தேன்’ என தமிழ்நெட்டிற்கு வழங்கிய சிறப்புக் கட்டுரையில் எழுதுகிறார்.

“சமஷ்டியின் காலம் எப்பவோ முடிவடைந்து விட்டது. தமிழ் பிரதேசங்கள் கொழும்பின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிக்கப்படாவிடின், இலங்கைத் தீவில் அமைதியோ, அபிவிருத்தியோ ஏற்படமுடியாது. இலங்கையில் உள்ள தமிழ் பிரதேசங்களில் இத்தகைய வாக்கெடுப்பு நடத்தினால் 100 வீதம் ‘ஆம்’ என்றே வாக்களிப்பார்கள். ஏழு கோடி தமிழர்கள் உள்ள தமிழ் நாட்டில், இப்படியொரு வாக்கெடுப்பு நடத்தினாலோ, டெல்லி அரசு ஓடி ஒளிப்பதற்கு இடம் தேடவேண்டி வரும் என அவர் எழுதுகிறார். அவரின் கருத்துப்படி, உலகளாவிய இந்தக் கவலைக்கிடமான நிலைமையின் கரு, பிரித்தானியக் காலனித்துவமும், அதனைத் தீர்ப்பதில் பின்னடைவு ஏற்படுத்திய உலக நடவடிக்கைகளும் ஆதலால், இதற்கு உலகமே பதிலளிக்க வேண்டும். யதார்த்தமான யுத்தம்,, ஆயுத ரீதியில் இல்லாவிட்டாலும் தற்பொழுதுதான் தொடங்குகிறது. நம்பிக்கை இழப்பதினால், ஒன்றையும் அடைய முடியாது. ஆனால், தமிழர்களின் இளைய சமுதாயம், நம்பிக்கையெனும் ஒளிக்கதிரை மிளிரச் செய்கிறது என அவர் கூறினார்.

‘இலங்கைத் தீவில் தமிழீழம் பற்றிய வெளிநாட்டுக் கருத்துக்கணிப்பு’ எனும் 42 பக்கங்கள் அடங்கிய டாக்டர் செனிவரத்னாவின் கட்டுரையின் முக்கிய அம்சங்கள் கீழே தரப்படுகின்றன. முழுக் கட்டுரையையும் ஆங்கிலத்தில் வாசிக்க விரும்பும் வாசகர்கள் ஆங்கிலக்கட்டுரையை இந்த இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம். http://www.tamilnet.com/img/publish/2010/03/Dr_Brian_Senewiratne_on_Tamil_ref.pdf 78 வயது டாக்டர் செனிவரத்னா ஆஸ்திரேலியாவில், வசிக்கும் புகழ் பெற்ற சிங்கள வைத்தியர். அவர் பன்டாரநாயக்கா குடும்பத்தைச் சேர்ந்தவர் எனினும் தமிழீழக் கொள்கையை நீண்ட காலமாக ஆதரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழ வாக்கெடுப்பு – இதுவரை உலகம் முழுவதிலும் இப்படியொரு தீர்ப்பை எந்த விடயத்திலும், எந்த இடத்திலும் நான் காணவில்லை. புலம் பெயர் தமிழ் மக்கள் பெரும்பான்மையாகத் தமிழீழம் எனும் வேறு நாட்டை விரும்புகிறார்கள் என்ற கூற்று மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது ஒன்றாகும். இத்தனை வருடங்களாக இவ்விடயத்தில் ஈடுபட்ட போதிலும், இந்தத் தீர்ப்பினால் நான் பிரம்மிப்படைந்தேன்.

இலங்கைத் தீவில் என்பது ஒரு குடியேற்ற நாட்டின் அமைப்பு. தமிழர்கள் இந்த வாக்கெடுப்பின் மூலம் கேட்பதும், பேராதரவோடு உறுதிப்படுத்துவதும், தோல்வியுற்ற இந்தக் குடியேற்ற அரசமைப்பைக் கலைக்க வேண்டும் என்பதே. 70 கோடி தமிழர்கள் வசிக்கும் தமிழ் நாட்டில், இப்படியொரு வாக்கெடுப்பை நடத்தினால், டெல்லி அரசு மாத்திரமல்ல அத்துடன் அவர்களின் உளவுத்துறையான ‘ரா’ அமைப்பும் ஒளித்தோட வேண்டி வரும்.

இலங்கைத் தீவில் தமிழ் பிரதேசங்களாகிய வடக்கிலும் கிழக்கிலும் ஒரு வாக்கெடுப்பைப் பார்க்க நான் ஆசைப் படுகிறேன். ஆனால், அத்தகைய வாக்கெடுப்பை இராஜபக்சேவின் இராணுவ சீருடையுடனோ அல்லது இல்லாமலோ பணியாற்றும் அடிவருடிகளைத் தவிர்த்தும், அல்லது வாக்காளர்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என தமது எஜமானர்களுக்கு முறையிடுவதற்கு வேவு பார்க்கும் தமிழ் ‘உதவியாளர்களைத்’ தவிர்த்தும் இது நடைபெற வேண்டும். அதாவது, ஒரு நம்பகமான வாக்கெடுப்பில், இலங்கைத் தீவில் இராணுவம் அப்பிரதேசங்களில் இருந்து விலக்கப்பட்டு, இராஜபக்சேவின் பல்லக்குக் காவிகளான கருணா, பிள்ளையான் போன்றவர்களும் தவிர்க்கப்பட்டால் நூறு வீதம் தமிழீழத்திற்கு ஆதரவான வாக்குகள் சுலபமாகக் கிடைக்கலாம்.

சமஷ்டித் தீர்வின் பயனின்மை

அன்றும் (1945-ல்) அதனிலும் பார்க்க இன்றும், இந்தப் பொறுப்பற்ற, நாசகாரமான பிரித்தானியக் குடியேற்ற அமைப்பை இல்லாது ஓழிக்கும் வரை, இலங்கைத் தீவில் அமைதியோ, அபிவிருத்தியோ வரப்போவதில்லை. அப்படிச் செய்வதன் மூலம் கிடைப்பது ‘ஈழம்’ எனப்படலாம். அல்லது வேறொன்றாகலாம். ஆனால், தமிழ்ப் பிரதேசங்களில் நிர்வாக உரிமை, சிங்களவர்களின் கைகளுக்கு வெளியே கொணரப்பட வேண்டும். நார்வே வாக்கெடுப்பு முடிவுற்று (98.95 மூ தமிழீழ ஆதரவு வாக்குகளின் பின்) சில நாட்களில் இலங்கை தீவில் நடைபெற்ற நடைமுறை தமிழீழ அரசை நிறுவியதில் பங்கெடுத்த நார்விஜிய மந்திரி எரிக் சோல்கைம் (அது 2009-ல் அழிக்கப்படும் முன்) சமஷ்டி அரசியல் இலங்கைத் தீவின் பிரச்சனைக்கு ஒரு உகந்த தீர்வு எனக் கூறினார். மதிப்பிற்குரிய மந்திரியும், இலங்கைத் தீவிலும் வெளிநாடுகளிலும் உள்ள சில ‘நடு நிலைமை வகிக்கும்’ தமிழ்ப் பிரமுகர்களும் இன்னும் தமது கடந்த கால எண்ணங்களுடனே வாழ்கின்றார்கள். சமஷ்டி பற்றிய காலம் எப்பொழுதோ கடந்து விட்டது.

இலங்கைத் தீவில் சமஷ்டி ஆட்சி இயங்குவதற்கு, தமிழர்கள் கொழும்பில் நம்பிக்கை வைக்கவேண்டும். அவர்கள் சித்த சுவாதீனம் அடைந்தாலொழிய அத்தகைய நம்பிக்கை வைப்பதை நான் எதிர்பார்க்க முடியாது. தமிழர்கள் எதனைக் கட்டியெழுப்பினாலும், அது அழிக்கப்படும் என்பதை இராஜபக்சே திட்டத் தெளிவாகக் காட்டியுள்ளார்.

இந்த யதார்த்தத்தை, ஹரோ-வின் கன்சர்வேட்டீவ் வேட்பாளராகிய டாக்டர் ரேச்சல் ஜாய்ஸ் எடுத்துக் கூறும்போது ‘எனது நீண்ட கால நோக்கில் இலங்கைத் தீவின் அமைதிக்கு ஒரே நேர்மையான பாதை ஈழத்தை அமைக்கும் ஒரு அரசியல் தீர்ப்பாகும். அது ஒன்றுதான் நீண்ட நோக்கில் வெற்றியளிக்கக் கூடிய தீர்ப்பு’.

தமிழ் வாக்கெடுப்பிற்கு எதிர்ப்பு:

தமிழ் வாக்கெடுப்பில் எதிராக ‘இல்லையென வாக்களித்த’ 561 (0.28 மூ) மக்களின் மனதில் எத்தகைய தீர்வு இருந்ததென அறிய ஆவற் பட்டேன்.

1. விடுதலை கிடைத்தபின் இலங்கைத் தீவில் இருந்த அதே நிலையைத் தொடர்வதன் மூலம்

தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகவோ அல்லது மூன்றாந்தரப் பிரஜைகளாகவோ வாழ்வது.

2. தமிழர்கள் எல்லாவற்றையும் கைவிட்டுச் சிங்களவர்களாக மாறுவது.

3. சிங்கள எஜமானர்கள் கொடுப்பதைக் கைநீட்டி இரந்து பெறுவது.

4. சிங்கள ஆட்சியாளர்களின் உதார குணத்தை நம்பி ‘சமஷ்டி ஆட்சி’ கிடைக்குமென

எதிர்பார்ப்பது.

சமஷ்டித் தீர்வு, அரசியல் அறியாமை உடையவர்களுக்கே ஏற்றதாகும். (இல்லையென வாக்களித்தவர்கள், நடுநிலைமை எனக்கூறும் பிரமுகர்கள், இலங்கை தீவில் அரசியல் சரித்திரப் பதிவுகளை அறியாத பரிதாபத்திற்குரிய எரிக் சோல்கைம் போன்ற வெளிநாட்டவர்கள்) கனடாவில் இவ்வாக்கெடுப்பிற்கு எதிராக ஒரு பரப்புரை மேற்கொள்ளப்பட்டதற்குக் காரணம், இத்தகைய ‘ஆம்’ எனும் செய்தி இலங்கைத் தீவின் அரசை எட்டினால், வாக்காளர்கள் இலங்கைத் தீவிற்கு காலடி எடுத்து வைப்பதைப் பாதிக்கும் என்பதாகும். பல வருடங்கள் என்னுடன் வேலை செய்த கனடிய காங்கிரஸின் நிலைப்பாட்டில் நான் கவனம் செலுத்தினேன். கனடாவில் வாக்கெடுப்பு நடைபெற்ற அதே சமயம், வியன்னாவில், இலங்கை தீவின் சில தமிழறிஞர்கள் (நான் சந்தித்த சிலரும்;) உள்ளக சுயநிர்ணயம், திம்புக் கொள்கை பற்றி ஆலோசித்தனர். இத்தகைய அழிகரைகளினால் திசை திருப்பப்படாமலும், தளர்ச்சி அடையாமலும், பயமடையாமலும் தமது வாக்கெடுப்பை அமைதியாக கொண்டு செல்லும்படி அதை ஏற்படுத்தியவர்களுக்கு நான் கூறுவேன். தமிழ் இளைஞர்கள் எமக்கு ஒளியூட்டுபவர்கள் – ஊடகங்களின் ஆதரவின்றியும் இவர்கள் பிரித்தானியாவில் நடாத்திய இவ்வாக்கெடுப்பு இளைஞர்களிலேயே தங்கியிருந்தது. வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலேயே இளைஞர்களின் பங்கெடுப்பு தெளிவாக விளக்கப்பட்டது. அவர்கள் முழுமூச்சாக இந்த புனிதப்பணியில் பங்குபற்றி, தமிழீழம் எனும் குறிக்கோளை அடையும் வரை ஈடுபட வேண்டும் என அதில் கூறப்பட்டது.

இக்கவலைக்கிடமான நிலை குடியேற்ற அரசினால் ஏற்பட்டது. அதன் பொறுப்பு பிரித்தானியாவையே சாரும்:

பிரித்தானியாவின் குடியேற்ற அரசையும், இலங்கைத் தீவில் இருந்த குழப்ப நிலையைத் தீர்க்க முற்பட்டு மேலும் ஆழமான குழப்பங்களை உண்டாக்கிய கோல் ப்ரூக், கேமரூன், டொனாமூர், சோல்பரி ஆகியோரையும் அவர்களோடு கூடிய ஆளுணர்களையும் இந்த நிலையை ஏற்படுத்திய குற்றச்சாட்டுகள் சேரும். சிங்களவர்களின் தற்போதைய நாடகத்திற்கு இவர்களே வழியமைத்துக் கொடுத்தார்கள். பிரித்தானியா இதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோருவது இதற்கு ஒரு முதற்படியாகலாம்.

1833-ல்’ கோல்ப்ரூக்-கேமரூன் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் பிரித்தானியரால் தமது நிர்வாக வசதிக்கு கொணரப்பட்டு, சுற்றுப்புறங்களின் வளர்ச்சியில் பாராதூரமான அலட்சியங்களையும் அதனால் நாட்டுக்கு எல்லாவற்றிற்கும் மேலான தீங்கையும் விளைவித்தன. ஹியூஜ் கிளைகோன் என்பவர் தனது ‘கிளைகோன் குறிப்பு’ எனும் நூலில் 1799-லேயே சிங்களவர்களும் தமிழர்களும் வேறாக குடியமர்ந்திருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார். முற்காலந்தொட்டு, இலங்கைத் தீவை சிங்களவர்கள் வலபா ஆற்றின் தெற்கு மேற்குப் பகுதிகளின் உள்நாட்டிலும் தமிழர்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளிலும் பிரிந்திருந்தார்கள். அவர்கள் இருபாலாரும் தமது மதம், மொழி, பழக்கவழக்கங்களில் முற்றிலும் வேறுபட்டவர்கள்.

இப்படிப்பட்ட முக்கியம் வாய்ந்த குறிப்பினை கிளைகோன் அனுப்பிய பின்பும் கோல்ப்ரூக் ஆனவர் கோட்டே, யாழ்ப்பாணம், கண்டி இராச்சியங்கள் அழிக்கப்பட்டுக் கொழும்பில் மத்திய அரசு அமைக்கப்பட வேண்டும் எனத் தீர்மானித்தார். சமூக பிரதிநிதித்துவத்தையும் சர்வதேச வாக்களிப்பையும் அழிப்பது, ‘சிறுபான்மையினரின் அழிவு’ க்கு வழிவகுக்கும் என அகில இலங்கைத் தீவின் தமிழ் காங்கிரஸ் சரியாக எடுத்துக்கூறியது. இலங்கைத் தீவினை முழுவதும் ஒரு தேசம் எனத் தவறாக எண்ணியமைதான் ஆட்சியாளர்கள் விட்ட பெரிய தவறாகும். உண்மை நிலையானது யாதெனில், இலங்கைத் தீவு ஒரு நாடு. அதில் சிங்களவர், தமிழர் என இரு தேசிய இனங்களும், இந்தியத் தமிழர், இலங்கைத் தீவின் முஸ்லீம்கள், இந்திய முஸ்லீம்கள், பரங்கிகள், மலேயர் என வேறு ஐந்து சமுதாயத்தினரும் இருந்தனர்.

டொனாமூர் குழுவினர்க்குச் சமஷ்டி ஆட்சியைக் கோரி கண்டிச் சிங்களவர்களால் ஒரு பலமான அறிக்கை விடப்பட்டது. ‘எமக்கு, எமது மக்கள் சுயமாக வாழ வேண்டும். அதற்கு அமெரிக்காவைப் போல ஒர் சமஷ்டி ஆட்சி வேண்டும். அதன் மூலம் எல்லாத் தேசிய இனங்களும் மற்றவர்களின் தலையீட்டைத் தவிர்த்துத் தமது சொந்த தேசியத்தை வளர்க்கலாம்’ என அது கோரியது. இக்கோரிக்கை இன்றையத் தமிழர்களின் பிரச்சனைக்கும் வாக்கெடுப்பிற்கும் மிகவும் முக்கியமானதாகிறது. 1840-ல் கண்டியில் வாழ்ந்த விவசாயிகளுக்குத் தமது காணியை உறுதிபடுத்துவது முடியாத காரியமாய் இருந்தது (இன்று இராணுவக் கட்டுப்பாட்டில், வடக்கில் இருக்கும் தமிழரின் நிலைபோல்!). 1948-ல் சோல்பரியின் குழுவானது இலங்கை அரசின் யாப்பில் சிறுபான்மையினர்க்கு எதிராக ஒன்றையும் காணமுடியவில்லை எனக் கூறியது.

1948-ன் பின் தமிழர்கள் தமது இறையாண்மையைச் சிங்கள பெருபான்மை அரசிடம் இழந்துவிட்டார்களா?:

இதற்கு மறுமொழி நிச்சயமாக ‘ஆம்’ என்பதே. இதற்குத் தனியே பிரித்தானியா மாத்திரம்தான் பொறுப்பு எனக்கூற முடியாது. இலங்கைத் தீவின் மக்களுக்கு 60 வருடகாலமிருந்தும், அவர்கள், பிரித்தானியரால் செய்யப்பட்ட அழிவை நிவர்த்திச் செய்வதற்குப் பதிலாக அதனுடன் கூடிய அழிவை உண்டாக்கியுள்ளனர். 1972 குடியரசு யாப்பின் மூலம் சோல்புரி யாப்பில் இருந்த பாதுகாப்பளிக்கும் ஷரத்துகளை அகற்றி தமது குறிக்கோள்களை அடைந்தனர். இதனால் 1. தமிழர்களுக்கு எதிராக அரசாங்கம் தனக்கு விரும்பிய எதையும் செய்யலாம் (கல்வி, தொழில் ஆகிய எல்லாவற்றிலும் பாகுபாடு). 2. இலங்கைத் தீவினை சிங்கள பௌத்த நாடாக மாற்றலாம்.

6வது திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் அரசுரிமையை ஒழித்தது. 1983-ல் ஜெயவர்த்தனாவின் குண்டர்களும், கொலைகார மந்திரிகளும், புத்த பிக்குகளும் நடாத்திய இனப்படுகொலையின் பின்னும், தமிழ் பிரதேசமென அழைக்கப்படுவதை இது தடுத்தது. இதன் மூலம் இலங்கைத் தீவிலோ, வெளிநாட்டிலோ தமிழர்களுக்கு இலங்கைத் தீவிற்;குள் ஓர் தனிநாடு கோர முடியாது. சரித்திர பூர்வமாக ஓர் தமிழரசு இருந்தததை மறுக்கும் முயற்சியும் தற்போது மேற்கொள்ளப்படுகிறது. தமிழரசு என ஒன்று இல்லாவிடின் தமிழ் மக்கள எப்படி இறையாண்மையைக் கோர முடியும்? என்பதே சிங்கள அரசின் தர்க்கம்.

போரும் இன அழிப்பும் – பயங்கரவாதத்தின் சுற்றுமாற்று:

கீழ்கண்ட சம்பவங்கள் நடைபெற்றன.

1. சிங்கள மக்களைக் கொண்ட இராணுவமும், தமிழ் மக்களைக் கொண்ட இராணுவமும்

(விடுதலைப் புலிகள்) யுத்தத்தில் மோதின.

2. தமிழருக் கெதிரான இனக்கலவரங்கள் தொடர்ச்சியாகத் தமிழர்களை அடிபணிந்து சிங்கள

பௌத்த அரசைச் சர்வமத சர்வகலாச்சார அரசாக ஏற்கும்படி வற்புறுத்தியது.

3. இந்து சமுத்திரத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு இலங்கைத் தீவினைவிட வேறு

இடம் இருக்க முடியாது என சர்வதேசங்கள் காய் நகர்த்தின.

18 மூ உள்ள தமிழர்களால் என்ன செய்ய முடியும்?

1. அவர்களை நாட்டிலிருந்து கலைக்கலாம். 13 இலட்சம் தமிழ் மக்கள் முன்னரேயே

சென்றுவிட்டனர். மற்றவர்கள் தற்போது வெளியேறிவருகின்றனர். எப்படியாயினும் சிலர்

மிஞ்சியுள்ளனர்.

2. அவர்களை அகதிகளாக்கலாம். இங்கு ஏறத்தாழ 5 இலட்சம் தமிழர்கள் இந்நிலையிலேயே

தற்போது உள்ளனர். தமிழ் நாட்டில் 1இ50இ000 ஆயிரம் பேர் அகதிகளாக உள்ளனர்.

3. அவர்களை ‘காணாமற் போகச் செய்யலாம்’. உலகத்தில் காணாமற் போக்குவதில் (ஈராக்

முதலிடத்தைப் பெறுகிறது) இலங்கைத் தீவு இரண்டாமிடத்தைப் பெறுகிறது. இப்படிக்

காணாமற் போகிறவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களாவர்.

4. அவர்களைக் கொன்றுவிடலாம். அதாவது இன அழிப்புச் செய்யலாம். தற்போது 2இ50இ000

(பெரும்பாலும் அதனிலும்கூட) தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இது இனஅழிப்பு நடவடிக்கையாகும் :

ஐ.நா-வின் சட்டத்தின்படி ஒரு தேசிய, சமய, கலாச்சார குழுவினரை முழுதாகவோ பகுதியாகவோ அழிக்கும் எண்ணத்துடன் செய்யப்படுவது இனப்படுகொலை என மொழியப்படும். இலங்கைத் தீவுத் தமிழரைப் பொறுத்தவரையில், இலங்கைத் தீவில் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும் பகுதியினர் அவர்களாகும்.

இனஅழிப்பில் பலவிதங்கள் உண்டு – கலாச்சார, பொருளாதார, சமய இனஅழிப்பாகியன. இவற்றை அழிக்கும் நோக்கோடு செய்யும் செயல்கள் இனஅழிப்பாகும். இலங்கைத் தீவின் அரசு இத்தகைய எல்லா வகை இனஅழிப்புகளையும் புரியும் குற்றவாளியாகிறது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருக்கும் தமிழர்களின் நிலைமை தமிழர் சிங்கள என்ற வரையறைவுக்கப்பால் ஒரு மனித உரிமைப் பிரச்சனை. உலகளாவிய பரிமாணத்துடன் உலகளாவிய பின்தங்கல் நிகழ்ந்ததால் அதற்கு உலகளாவிய தீர்வு தேவை. மனித உரிமைப் பிரச்சனை இனிமேல் உள்நாட்டுப் பிரச்சனை எனத் தட்டிக்கழிக்க முடியாது. இதனால்தான் தென்னாபிரிக்காவில் நிற வேற்றுமை ஒழிக்கப்பட்டது. இன்னும் பல உதாரணங்கள் உள்ளன. இலங்கைத் தீவும் இதற்கு விதிவிலக்காக முடியாது.

நம்பிக்கை இழப்பதன் மூலம் ஒன்றையும் அடையமுடியாது:

சர்ச்சில் கூறியது போல் எங்கும் போரிடுங்கள் என நான் கூறவில்லை. ஆனால் தோல்வி மனப்பாண்மையைத் தவிருங்கள் என்றுதான் கூறுகிறேன். இராணுவத்துறை அல்லாத பல மார்க்கங்கள் இன்று உள்ளன. எனவே இராணுவ முறையில் போர் தொடங்கும்படி நான் கூறவில்லை.

உண்மையான போர் தற்போது தொடங்குகிறது. சம்பிரதாயமானப் போர் முடிந்திருக்கலாம். ஆனால் போருக்கான பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை. ‘நாங்கள் வெளிநாடுகளில் இருக்கிறோம்’ என சார்ல்ஸ் டிகோல் நாஸிகள் பிரான்ஸிற்கு வரும்போதும், கூறினர். ஆனால் வெளிநாட்டில் இருப்பதால்தான் உங்கள் பொறுப்புகள் இன்னும் கூடியவையாக உள்ளன. 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வெளிநாட்டில் இருந்தும் தமது பிரச்சனையைத் தீர்க்கமுடியவில்லை என்றால் அவர்களில் அல்லது அவர்களது வழிமுறைகளில் அல்லது இரண்டிலும் ஏதோ பிழை இருக்க வேண்டும்.

கிழக்குத் தீமோரில் அப்படியொரு சாட்டு ஏற்கப்படலாம். ஏனெனில் அங்கு புலம்பெயர் மக்கள் குறைவாகவும் கல்வியறிவில் குறைவாகவும் இருந்தனர். இலங்கைத் தீவின் தமிழரின் நிலை வேறு. இத்தனை வலுவுள்ள புலம்பெயர் சமுதாயத்தை உலகில் உள்ள எந்தவொரு விடுதலை இயக்கமும் கொண்டிருக்க முடியாது என்பதை நான் அறிவேன்.

‘ஈடுபடுங்கள்’ என்பதே பிரெயின் செனிவரத்னா தமிழர்களுக்கு கூறிய தொகுப்பான புத்திமதியாகும்.

(இக்கட்டுரை Tamilnet இணையத்தளத்திற்காக ‘‘Real war is just beginning, get involved:’ எனும் தலைப்பில் 19-03-2010 அன்று Dr. Brian Senewiratne அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையைத் தழுவிய தமிழாக்கம் )

மீனகம்

மாவீரர்களின் எலும்புக்கூடுகளையும், வரிப்புலிச் சீருடைகளையும் காட்டுமிராண்டித்தனமாக தோண்டியெடுத்து வீதியில் கொட்டும் சிங்கள காடையர்கள்

அண்மைக்காலமாக தமிழீழ தாயக பிரதேசம் எங்கும் விடுதலைப்புலிகளின் நினைவுச்சின்னங்கள், மாவீரர் துயிலும் இல்லங்கள், தமிழர் வரலாற்று சான்றுகள், தமிழர் கலாச்சார நினைவு சான்றுகள் என அனைத்தையும் அழிப்பதில் மிகக்கவனமாக துரித கெதியில் சிங்கள பேரினவாத அரசு செயற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வன்னியில் நேரில்கண்ட சாட்சி ஒருவரின் வாயிலிருந்து வெளிவந்த சில அதிர்ச்சி தரும் ஆனால் தமிழர் மனங்களை கொதித்தெழவைக்கும் சில சம்பவங்களை இங்கே தருகிறோம்.

மாவீரர் துயிலும் இல்லங்கள் அகழப்பட்டு அவ்வாறான துயிலுமில்லங்கள் அங்கு இருந்தன என்ற அடையாளத்தையே இல்லாமல் சிறிலங்கா அரச இராணுவ இயந்திரங்கள் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றனர்.

நடுகற்களையும் கல்லறைகளையும் இடித்தழிப்பதோடு நின்ற இச்செயற்பாடுகள் இப்போது இன்னும் உக்கிரம்பெற்று துயிலுமில்லங்களின் தடயங்களையே இல்லாதளவுக்கு அழிக்கும் நிலைக்கு முற்றியுள்ளது.

வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்லம் முற்றாக அழிக்கப்பட்டு உருத்தெரியாமல் மாற்றப்பட்டு வருகிறது. வன்னிவிளாங்குள – வவுனிக்குளப் பாதை சீரமைப்பிற்கு தேவையான கிரவல் மண் வன்னிவிளாங்குள மாவீரர் துயிலுமில்ல வளவிலிருந்தே அகழ்ந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இராணுவத்தினரின் மேற்பார்வையோடு சிங்களத் தொழிலாளர்களைக் கொண்டு நடத்தப்படும் இவ்வேலைத்திட்டத்தில் வன்னிவிளாங்குள துயிலுமில்லப்பகுதி கனரகப் பொறிகளைக் கொண்டு ஆழத் தோண்டப்படுகிறது.

உக்கிப் போகாமல் இருக்கும் வரிப்புலிச் சீருடைகளும் மாவீரர்களின் எலும்புக்கூடுகளும் கூட தோண்டியெடுக்கப்பட்டு ஒருபுறத்தில் போடப்படுகின்றன. மணலோடு மணலாகவும் அவை அள்ளிச்சென்று வீதியில் கொட்டப்படுகின்றன. அங்கே பொறுக்கப்படும் சீருடை எச்சங்களும் எலும்புகளும் பொறுக்கப்பட்டு காட்டுக்குள்ளோ வீதிக் கரைகளிலோ வீசப்படுகின்றன. பொதுமக்கள் நன்றாகப் பார்க்கவேண்டுமென்ற நோக்கத்திலும் துயிலுமில்லத்திலிருந்து வீதிக்கரைக்குக் கொண்டுவரப்பட்டு இவை ஒன்றாகப் போடப்படும் நிகழ்வும் தற்போது இடம்பெறுகிறது. தமிழ்மக்களின் ஆன்மாவைச் சீண்டிப்பார்த்துப் பரவசப்படும் ஒரு நிலையே தற்போது நடந்துகொண்டிருப்பதாக குறிப்பிட்ட அத்தமிழ்மகன் கண்ணீரோடு தெரிவித்தார்.

இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் கற்சிலைமடுக் கிராமத்தில் 1803-08-31 ஆம் ஆண்டு மன்னன் பண்டாரவன்னியன் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்குடன் ஏற்பட்ட மோதலில் தோல்வி அடைந்தாதாக குறிப்பிட்டு வன்னிமண்ணின் மாபெரும் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுச் சின்னமாக இருந்த நினைவுக்கல் அழிக்கப்பட்டிருந்தது.

இவற்றின் தொடர்ச்சியாக அண்மையில் முன்னர் யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அமைந்திருந்த தியாகி திலீபன் நினைவுத் தூபி அடித்து உடைத்து நொருக்கப்பட்டுமிருந்தது. அகிம்சை வழியில் நீதி கேட்டு பன்னிரு நாட்கள் நீர்கூட அருந்தாது உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகியின் நினைவுத் தூபியை உடைப்பதென்பது தமிழர்களின் சுயகௌரவத்தை சீண்டிப்பார்க்கும் நிகழ்வாகவே பார்க்கவேண்டும்.

இவ்வாறு தமிழர்களின் அடையாளங்களையும் சின்னங்களையும் அழிக்கின்ற நடவடிக்கைகள் தன்னெழுச்சியாக நடத்தப்படுவவை அல்ல. அண்மையில் சிறிலங்கா அரச அமைச்சர் ஒருவர் புலிகளின் (தமிழர்களின்) அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ அழித்தொழிக்கவே முடிவுசெய்துள்ளதாக அறிவித்திருந்தமையை நாம் மறந்துவிடக்கூடாது.

எனவே இவ்வாறு தமிழர் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகள் முனைப்பு பெறும் அதேவேளை சிங்கள தேசத்தின் அடையாளங்களை தமிழர் பிரதேசங்களில் திணிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்றுவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

http://meenakam.com/

TamilWin.Com

TamilWin.Com

சனி, 27 மார்ச், 2010

பொட்டு அம்மான் இறந்ததாக அறிவிக்க இன்டர்போலுக்கு இலங்கை நெருக்குதல்

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் இறந்து விட்டதாக அறிவிக்க வேண்டும். அவரது பெயரை தேடுவோர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என இன்டர்போலுக்கு இலங்கை [^] அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

பொட்டு அம்மான் குறித்து எந்தவிதத் தகவலும் இதுவரை இல்லை. அவர் உயிருடன் இருப்பதாக ஒரு தகவலும், இறந்து விட்டதாக இலங்கை அரசின் தகவலும் கூறி வருகின்றன.

இறந்து விட்டதாக இலங்கை கூறினாலும், பொட்டு அம்மானின் உடல் மீட்கப்படவில்லை.

பொட்டு அம்மான் உயிருடன் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக இந்திய உளவுத்துறையான ரா நம்புகிறது. அவரைத் தேடியும் வருகிறது. அதேபோல இன்டர்போல் அமைப்பும் பொட்டு அம்மானைத் தொடர்ந்து தேடி வருகிறது.

இந்த நிலையில் திடீரென சில நாட்களுக்கு முன்பு பொட்டு அம்மானும், அவரது மனைவியும் உடலில் குண்டுகளைக் கட்டிக் கொண்டு, போரின் இறுதி நாளின்போது தற்கொலை செய்து கொண்டதாக இலங்கை கூறியது.

இதைத் தொடர்ந்து தற்போது பொட்டு அம்மான் இறந்து விட்டதாக இன்டர்போல் அறிவிக்க வேண்டும் எனவும் இலங்கை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இலங்கை ராணுவ உளவுப் பிரிவு தலைவர் கபிலா ஹெண்டவிதரனா கூறுகையில், பொட்டு அம்மானை இறந்தவராக கருதி, தேடப்படுவோர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என இன்டர்போலைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

பொட்டு அம்மான் இறந்து விட்டதாக உறுதியாக நம்புகிறோம் என்று கூறினார்.

பொட்டு அம்மான் விஷயத்தில் திடீரென இலங்கை அரசு இவ்வளவு அவசரம் காட்டுவதற்கான காரணம் புரியவில்லை.

இந்திய தூதரகம் திறக்கப்படுவதால் திலீபனின் நினைவுத்தூண் இடிப்பு ?

யாழ்ப்பாணத்தில் இந்தியத் தூதரக கிளை அலுவலகம் திறக்கப்படுவதற்கும், தியாகி திலீபனின் நினைவுத்தூண் தகர்க்கப்பட்டதற்கும் தொடர்பு இருப்பதாகவும், இந்தியாவின் தூண்டுதல் காரணமாகவே நினைவுத்தூண் தகர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் 'ஈழமுரசு' பத்திரிகை வெளியிட்டுள்ள
செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரகத்தின் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபாமா ராவ், இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருந்ததுடன், இது தொடர்பான ஆலோசனைகளையும் கொழும்பிலுள்ள தமது தூதரகத்துடன் மேற்கொண்டிருந்தார்.

இதனையடுத்து, யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகத்தை திறப்பதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.இந்தத் துணைத் தூதரகம் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் மே மாதம் திறந்துவைக்கப்பட உள்ளதாக கொழும்பிலுள்ள இந்தியத் தூரகம் அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் நல்லூர் பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவு தூண் தகர்க்கப்பட்டு, அலங்கோலப்படுத்தப்பட்டுள்ளது.

போர் இடம்பெற்ற காலங்களிலும் சரி, அதன் பின்னரான சமாதான காலத்திலும் சரி சிறிய சேதங்களுக்கு உள்ளான இந்தத்தூண் முற்றாக தகர்க்கப்பட்டிருக்கவில்லை.

ஆனால், போர் முடிவடைந்து விட்டதாக கூறப்பட்டு பத்து மாதங்களை எட்டியுள்ள நிலையில், திலீபனின் நினைவுத்தூபி தகர்க்கப்பட்டுள்ளது.

இந்த நினைவுத்தூபித் தகர்ப்பினை சிங்களக் காடையர்களோ அல்லது அவர்களின் இராணுவமோ மேற்கொண்டிருந்தாலும் தகர்ப்பிற்கான பின்னணிக் காரணம் வேறு என கருதப்படுகின்றது.

குறிப்பாக இந்தியத் தூதரகம் திறக்கப்படுவதற்கும், இந்த நினைவு தூபி தகர்க்பப்பட்டதற்கும் காரணங்கள் ஒற்றுமையாக இருக்கின்றன என பரவலான குற்றச்சாட்டுக்கள் எழத்தொடங்கியுள்ளன.

தியாகி திலீபன் இந்திய இராணுவத்தினர் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில், ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டவர்.

இறுதிவரை தனது உறுதியில் தளராது போராடிய திலீபனை, இந்தியா கவனத்தில் எடுக்கத் தவறியது. திலீபன் சாவைத் தழுவினார்.இதனால், அகிம்சைக்கு பெயர் போன நாடு என தன்னைப் பெருமைப்படுத்திய இந்தியாவிற்கு, பெருத்த அவமானமே மிஞ்சியது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் தூதரகம் அமைத்து தங்கப்போகும் இந்தியாவிற்கு திலீபனின் நினைவுத்தூபி தமது தூதரகத்திற்கு அருகில் அமைந்திருப்பது நெருடலாகவும் ஒரு அவமானச் சின்னமாகவும் இருக்கும் என்ற நிலையிலேயே இந்தத் தகர்ப்பு இடம்பெற்றிருப்பதாக கருதப்படுகின்றது.

திலீபனின் அகிம்சைப் போராட்டம் இலங்கை அரசுக்கு எதிரானதல்ல. அது இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானது.எனவே, இந்த நினைவுத்தூபி தகர்ப்பிற்கும் இந்தியத் தூதரகத் திறப்பிற்கும் ஒற்றுமையான காரணங்கள் இருக்கின்றன என்பது தெளிவாகின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியமரும் மக்களுக்கான நிதியுதவியை ஐ.நா. நிறுத்தியது - போதிய நிதி இல்லையாம்

மீள்குடியமரும் மக்களுக்கான நிதியுதவியை ஐ.நா. நிறுத்தியது - போதிய நிதி இல்லையாம்

உள் நாட்டுப் போரினால் இடம்பெயர்ந்து பின்னர் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமரும் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவிதற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறையாகவுள்ளதாலேயே நிதியுதவி நிறுத்தப்பட்டதாகக் கொழும்பில் உள்ள ஐ.நா.சபையின் அகதிக ளுக்கான தூதுவராலயப் பேச்சாளர் சொலக் கனி பெரேரா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,

ஒதுக்கப்பட்ட நிதி நிலைமையில் ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாகவே மீளக்குடியமரும் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியு தவி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.இம் மக்களில் இதுவரை உதவித் தொகை வழங்கப்படாமல் இருந்த குடும்பங் களுக்கு மார்ச் மாதம் இறுதி வரையில் 3மில்லியன் அமெரிக்க டொலர் வரை தேவைப்படுகின்றது.

இந்த நிதியுதவியைப் பெறுவதற்கான முன் முயற்சிகளில் நாம் ஈடுபட்டுள்ளோம். 2010 ஆம் ஆண்டுக்குள் மொத்தமாக 13 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி மக்களுக்கு வழங்குவதற்குத் தேவைப்படுகின்றது.

எதிர்வரும் மாதங்களில் இந்த நிதியுதவி எமக்குக் கிடைக்காத பட்சத்தில் மீளக்குடியமர் வதற்காக இடைத்தங்கல் முகாம்களில், நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு இந்த நிதியுதவி கிடைக்காமல் போகும் சந்தர்ப்பம் உண்டு.

இதேவேளை ஐ.நாவின் தூதரகத்தினால் வழங்கப்படும் உடுபுடைவைகள், பாய்கள், நுளம்பு வலைகள், சமையல் பாத்திரங்கள் மற்றும் காடுகளைச் சுத்தம் செய்வதற்கு வழங்கப்படும் உபகரணங்கள் தொடர்ந்தும் வழங்கப்படும் என்றும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பணி தொடர்ந்தும் மேற் கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரி வித்துள்ளார்.

திலிபன் தமிழ் வீரத்தின் அடையாளம் – கண்மணி

பேயாட்டம் போடும் மகிந்தாவின் அரசுக்கு முடிவுரைக்கான காலம் இதோ நெருங்கிவிட்டது. துட்டகைமுனியின் தொடராய் மகிந்தாவின் அக்கிரமங்கள் இதோ அழிவின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இன விடுதலைக்கான சமர் முடிவுற்றதாய் முழுதாய் நம்பிக் கொண்டிருக்கும் இவர்களின் பகல் கனவு பரிதாபத்திற்குரிய தோல்வியை தழும் காலங்கள் இதோ, கணக்கு முடிவுக்காய் காத்திருக்கிறது.

எந்த ஒரு தொடக்கமும் அழிவிலிருந்தே துளிர்கிறது என்கின்ற தத்துவம் தமிழீழ வரலாற்றிலும் முற்றிலும் முழுதுமாய் மெய்யாகிக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு அரக்கனும் செய்யாத கொடுஞ்செயலை மகிந்தா அரசு செய்து முடித்தப்பின், இன்னமும் அது தமக்கான கணக்கை தாமே முடித்துக் கொள்ள, தனித்துவம் வாய்ந்த தமிழரின் வரலாற்றை அழிக்க முயற்சிப்பதிலிருந்தே சிங்கள பேரினவாத பெருங்கொடுமை, அழிவை நோக்கி விழத் தொடங்கிவிட்டது என்பதை மகிந்தா அரசு செய்யும் ஒவ்வொரு செயலும் மறுபடியும், மறுபடியும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

இந்திய வல்லாதிக்க அரசு தமது வக்கிர கொடுமையை, தமது பார்ப்பனிய அடையாளத்தை, துரோகத்தின் முகத்தை தமிழீழ மண்ணில் காட்டியபோது இந்திய தேசத்தின் இதிகாசமாய் போற்றப்படும் காந்தியின் வழியிலேயே ஒரு சூரியன் அந்த மண்ணிலே தோன்றினான். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி சொந்த மண்ணின் விடுதலைக்காய் அந்த மண்ணின் இரும்பு மனதை இருக்கும் எல்லோருக்கும் அவன் அடையாளம் காட்டினான். சொட்டுத் தண்ணீர் தொண்டை குழிக்குள் இறங்காமல், பேரினவாத அடங்காபிடாரி தனத்தை அறிவிக்க, துரோக முகமூடியை கிழித்தெறிய, தம்மையே தனலாக்கி தமிழ்மேல் கொண்ட பற்றை தன் மக்கள் மீது கொண்ட அன்பை, தமது இனத்தை காக்க எடுத்த முடிவை துளிகூட சிதைவுறச் செய்யாமல் ஒவ்வொரு நாளும் தமது உடலின் அணுக்களை சிதைத்துக் கொண்டு மடிந்துபோனான். போனது அவனது உடல்மட்டும்தான். அவன் உயிர் அந்த ஈழ மண்ணின் வாசத்தை இன்னமும் சுவாசித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொருநாளும் தமிழீழ விடுதலைக்கான துளியாய் அவன் அந்த மண்ணிலே சுழன்று சுழன்று வீசிக் கொண்டுதான் இருக்கிறான்.

எந்த நாடு உண்ணாநிலை அறப்போராட்டத்தில் தம்மையே வறுத்திக் கொண்டு, விடுதலைப்பெற முடியும் என்று எடுத்தியம்பியதோ, அந்த நாட்டிற்கு எதிரான போராட்டத்தின் மகத்துவத்தை, அந்த போராட்டத்தின் மாட்சிமையை, அந்த போர் வடிவத்தின் உள்ளடக்கத்தை, அதில் புதைந்துள்ள உன்னதத்தை உலக மக்களுக்கு எடுத்துச் சொன்னான். தமது தலைவனை தாயாக பாவித்து தேசிய தலைவனின் அரவணைப்பில் அவன் மகிழ்ந்து இறந்துபோனான். அடடா… இதுவல்லவா தியாகம். புலிகள் என்றால் கருவி ஏந்தி களத்தில் இருப்பவர்கள் என்கின்ற அவதூறை எடுத்து அகற்றி, தம்மையே அழித்துக் கொள்ளும் ஆளுமை படைத்தவர்கள். கொண்ட லட்சியத்தை காட்டி காக்க தொடர்ந்து இயங்கும் போராட்டத்தின் வடிவங்கள் என்பதை உலக அரங்கிற்கு உணர்த்தியவன், திலிபன். இந்த உலகம் பல்வேறு களப்போர்களை கண்டறிவதற்கு காரணமாய் திகழ்ந்த மாமனிதன், புலிகளின் போர்ப்படைத் தலைவன், தமிழர்களின் வரலாற்றிற்கு சான்று பகர்ந்தவன், சான்றோன் எமது தேசிய தலைவனின் அடலேறு, அசைக்கமுடியாத, ஆளுமை வாய்ந்த, அளவிட முடியாத, உறுதிகொண்ட, எவரும் எதிர்பாராத, எளிமையான தியாகி திலிபன். அவன் இறந்தபோது, இந்த உலகமே தமிழீழ மண்ணை நோக்கி திரும்பி பார்த்தது.

தமிழீழ போராட்ட வரலாற்றை திசை மாற்றிய மரணம் அது. தமிழீழ போராட்டத்தின் வடிவங்களை உலகிற்கு வரிவரியாய் சொன்ன வரலாற்று வடிவங்களை மறுவாசிப்பிற்கு உட்படுத்தியவன் திலிபன். தம்மை அழித்துக் கொள்வதின் மூலம் இந்த மண்ணின் விடுதலை உறுதியானது என்றால், இன்னும் லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தம்மை அழித்துக் கொள்வதற்கு தரணியெங்கும் காத்திருக்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்தியவன் திலிபன். தமிழீழ மண்ணிற்கு மட்டுமல்ல, உலகத் தமிழர்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற மாபெரும் ஆற்றல் வாய்ந்த வீரன் திலிபன். அவன் விட்ட இடத்திலிருந்துதான் தமிழீழ போராட்ட வரலாறு மீண்டுமாய் தொடங்கியது. அந்த மாவீரனின் ஈகப்போராட்டம்தான், மரணத்தின் மீது இருந்த அச்சத்தை போக்கியது. திலிபனின் தியாக மரணமே கரும்புலிகளை படைத்தளிக்க காரணமானது. அந்த திலிபன் உருவமாய் இருக்கிறான் என, மகிந்தா மமதையோடு எண்ணிக் கொண்டிருக்கிறான். ஆனால் திலிபன் காற்றிலே கலந்திருக்கிறார். மரங்களின் அசைவிலே அவனின் நிகழ்வுகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. ஈழ மண்ணின் துகள்கள் அவனின் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கின்றன.

பிறந்த குழந்தைகள் எல்லாம் திலிபனை தமது உறவாகக் கொண்டாட தொடங்கிவிட்டது. பிறக்க இருக்கும் குழந்தைகளுக்கும் அவன் வீரத்தின் பிறப்பிடமாய் இருக்கப் போகிறான். அழிப்பது என்பது தம்மை அழித்துக் கொள்வதற்கு சமமானது என்பதை மகிந்தாவின் சகோதரர்கள் ஏனோ புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். இட்லரை விடவா? ஆனால் இட்லருக்கு ஏற்பட்டதை விட இந்த 21ஆம் நூற்றாண்டில் மிகப்பெரும் அழிவை மகிந்தா இலங்கை மக்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கே தரப்போகிறான் என்பதைதான் இப்பொழுது இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும் சான்று பகிர்ந்து கொண்டிருக்கின்றன. யாழ்ப்பானம். தமிழீழ வரலாற்றுக்கல்ல, தமிழ் வரலாற்றிற்கே சான்று பகர்ந்த இடம். யாழ்பானத்தின் தமிழ், இந்த உலகத்தின் மூளை முடுக்கெல்லாம் கொடி கட்டிய குலத்தை அறிமுகப்படுத்தியது. அங்கேதான் நமது எண்ணங்கள் நிறைந்த தியாகி திலிபனுக்கு சிலை வைக்கப்பட்டது. இது, தமிழ்நாட்டில் வைக்கப்படும் போற்றுவதற்கான சிலை அல்ல, இது உலக இளைஞர்களுக்கு வீரத்தை அடையாளம் காட்ட வைக்கப்பட்ட சிலை. வீர மறவர்களின் வாழ்வுக்கு விளை நிலமாக அறிமுகப்படுத்தப்பட்ட சிலை.

நல்லூரில் பருத்தித்துறை வீதியில் அமைந்த திலிபனின் சிலையை, சிலை என்று சொல்வதுகூட சரியானதல்ல, தமிழீழ மக்களின் அடையாளத்தை அதையும் தாண்டி உலகத் தமிழர்களின் ஆன்மாவாகத் திகழ்ந்த அந்த உருவத்தை நள்ளிரவில், அடையாளம் தெரியாத சிலர் அடித்து நொருக்கியதாக செய்தி கேட்டு நொருங்கிபோனது தமிழ்பாய்ந்த ரத்தங்களெல்லாம். அடித்து நொருக்கியது திலிபனின் சிலையல்ல, தமிழரின் இதயங்களை. அடித்து நொருக்கப்பட்டது அவனின் உருவ பொம்மையை அல்ல, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்கத்தை. மீண்டுமாய் அவன் இறப்பிலிருந்து தோன்றிய தமிழீழ போராட்டம், அவன் சிலையின் வீழ்ச்சியிலிருந்து மறுபிறப்பெடுக்கும் என்பதை உறுதிபடுத்தியது இந்த நிகழ்வு. தமிழீழத்தில் மட்டுமல்ல, இலங்கையிலும் சேர்த்து இன்று இடைவிடாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் பரப்புரைக்கு இந்த தியாகியின் உருவம் இடையூறாக இருக்குமோ? என்று அஞ்சிய கயவர்கள் யாரோ, கைத்தடி எடுத்து உயிரற்ற அந்த உருவத்தின்மீது எறிந்திருக்கிறார்கள்.

இதில் புதைந்துள்ள கேவலமான அரசியல், உலக அரங்கில் அவலத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவனின் சிலை தமது அரசியல் வாழ்வுக்கு அச்சுறுத்தலாய் அமைந்துவிடுமோ என்கின்ற எண்ணத்தில் சிலையை ஒழித்துவிட்டு, தம்மை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என யாரோ செய்த இந்த அவலச் செயல், மனித பண்பாட்டை மீண்டுமாய் ஒருமுறை கொலை செய்திருக்கிறது. மாந்த நாகரீகத்தை கொத்துக் குண்டுகளால் அழித்தொழித்த மகிந்தாவின் அடையாளம், மறுபடியும் விழித்தெழுந்ததை காணமுடிகிறது. அந்த மாபெரும் மனிதனின் நினைவுத்தூணை அழித்தொழித்து, திலிபனையே அழித்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் அடி முட்டாள் தனமான சிந்தனைக்கு எதிர்சமராய் விழித்தெழ இருக்கும் தமிழீழ போராட்டத்தின் அடுத்த நகர்வு, இந்த துரோகிகளுக்கு நிச்சயமாய் வீழ்ச்சியாகவே அமையப்போகிறது. அந்த மாமனிதனின் சிலை உடைப்புக்கு காரணமானவர்கள் எந்த நிலையிலும் அவனின் லட்சியத்தை, அவன் தம் மக்களின்மீதும், தமது இனத்தின்மீதும் கொண்ட தாகத்தை, அதை அடைவதற்காக தேர்வு செய்த பாதையை, கொஞ்சமும் குறைத்து மதிப்பிட்டிருக்கமாட்டார்கள் என்பது எமக்குத் தெரியும்.

அவர்களுக்குள் இருப்பதெல்லாம் திலிபனின் சிலையை உடைத்தால் தமிழரின் மனங்களிலுள்ள திலிபனின் பெயரை மறைத்துவிடலாம் என்கின்ற முட்டாள்தனமான சிந்தனைதான். ஆனால் சிலையை தாண்டி, அவன் இந்த தமிழ் சமுதாயத்தின் உயிரோட்டமாய் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்கின்ற அடிப்படை உண்மைகூட இந்த கயவாலிகளுக்கு தெரியவில்லையே என்று நினைக்கும்போது நகைப்பதா? வியப்பதா? எனப்புரியவில்லை. உலக வரலாற்றில் போர் காலங்களில் சரணடைவோர்களையும், கைதுசெய்வோர்களையும் நடத்தவேண்டிய வழிமுறைகள் அகில உலக போர்முறைகளின் சட்டதிட்டங்களின்படி, எல்லா போர்களங்களிலும் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இலங்கையிலே மகிந்தாவின் சிங்கள பேரினவாத அரசு, சரணடைய வந்த தமிழ்போராளிகள் மரபு மீறி சுட்டுக் கொன்றது. சரணடைந்த போராளிகளை கீழ்த்தரமாய் நடத்திக் கொண்டிருக்கிறது. ஆக, உலக வரலாற்றின் நடைமுறை என்பதும், மாந்தகுல மாண்பு என்பதும் இந்த மகிந்தாவிற்கு இப்போது விளங்காது. அதன் தொடக்கமாகத்தான் சிலைகளை உடைப்பதின் மூலம் தம்மை சிறுமைப்படுத்திக் கொள்ள தயாராகிவிட்டார்.

தமிழீழ அடையாளத்திற்காய் தம்மையே ஒப்படைத்த மாபெரும் போராளிகளுக்கு துயிலும் இல்லங்கள் தூய்மையாக இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத மகிந்தா, மாவீரர் துயிலும் இல்லங்களை உடைத்தெறிந்து தமது ஆணவ முகத்தை அடையாளப்படுத்தினார். உலகிலே வேறெங்கும் கல்லறைகளை உடைத்து போராளிகளின் உடலை வீசி எறிந்ததாக வரலாறு இல்லை. ஆனால் அப்படி ஒரு கேடு செயலை தொடர்ந்து தமிழீழ மண்ணில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் சிங்கள பாசிச அரசு, இப்போது தமிழர்களின் அடையாளங்களை அழிக்க தொடங்கியிருக்கிறது. அதன் முதல் படிதான், திலிபனின் சிலை உடைக்கப்பட்டது. ஒன்றுமட்டும் மகிந்தாவிற்கு புரியவேண்டும். இந்த பூமி சுழலும் தன்மை கொண்டது. எங்கு தொடங்கியதோ, அங்கேதான் மீண்டும் நிறைவு காணும். தமிழீழ போராட்டம் எங்கு தொடங்கியதோ, அங்கேதான் மீண்டும் தொடங்கப்போகிறது என்பதை குறியீடாகத்தான், திலிபனின் சிலை உடைப்பு நமக்கு குறித்துக் காட்டுகிறது. துட்டகைமுனு உலக அரங்கில் இதுவரை யாராலும் உச்சரிக்கப்படாத பெயராக மறக்கடிக்கப்பட்டான். ஆனால் எல்லாளன் மீண்டுமாய் உயிர்பெற்று உலக அரங்கிலே தமிழனுக்கான அடையாளத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறான்.

இனி துட்டகைமுனு வந்த அதே சமாதிதான் மகிந்தாவிற்கும் அருகே இருக்கிறது. மறந்துவிட வேண்டாம், தமிழனை அழிக்க நினைத்தவர்களெல்லாம் அழிந்து போனார்கள் என்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் உண்மையாகும். குறியீடாய், குலக்கொடியாய் நம்முடைய உள்ளங்களில் குடிகொண்டிருக்கும் திலிபனின் வீரச்செயல்களை நினைத்துபோற்ற வாய்ப்பளித்த மகிந்தாவிற்கு நாம் மறுபடியும் நன்றி சொல்கிறோம். திலிபன் வெறும் சிலையல்ல, அவன் தமிழ் விடுதலையின் குறியீடு. திலிபன் வெறும் பெயரல்ல, அவன் தமிழர் வீரத்தின் அடையாளம். இதை மகிந்தாவிற்கு சிங்களத்தில் யாராவது மொழி பெயர்த்து சொல்லுங்கள்.

http://meenakam.com/

சிங்களவர்கள் எங்களது துன்பங்களைப் பார்க்க மகிழ்வோடு வருகிறார்கள்: ஈழ மண்ணிலிருந்து ஒரு குமுறல்

தமிழ்நாட்டின் குமுதம் இதழிற்காக யாழ்ப்பாணத்திலிருந்து தீபச்செல்வன்.


கிளிநொச்சியை நான் விட்டு இறுதியாய் திரும்பும் பொழுது அது கொண்டிருந்த செழிப்பையும் வலிமையையும் நினைவு கொண்டு பார்கிறேன்.

ஆனால் இன்று அந்த அற்புத நகரம் முழுவதும் சிதைந்து போயிருக்கிறது.

இடிபாடடைந்த ஒரு நகரத்திற்கு நான் சென்றேன்.

இராணுவ மயமும் இராணுவ நடமாட்டமும் என்ற பயங்கரம் தான் மிகுந்திருக்கிறது.

எனக்கு சிறிய வயதிலிருந்தே தெரிந்த ஒரு சகோதரி. அவர்கள் 1990 இல் இடம்பெயர்ந்திருந்தார்கள். பின்னர் 1996ம் இடம்பெயர்ந்து எங்களுடன் வந்திருந்திருந்தவர்கள்.

அந்த சகோதரியின் கணவன் 2001ல் நடைபெற்ற சமர் ஒன்றில் வீரமரணம் அடைந்திருந்தார். அப்பொழுது அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. பின்னர் அவருக்கு ஒரு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

அவரை பார்த்த பொழுது பெரு அதிர்ச்சியே ஏற்பட்டது.

ஒரு கண்ணை இழந்து உடல் முழுவதும் பெருங் காயங்களுடன் மரத்தின் கீழாக சமைத்துக்கொண்டிருந்தார்.

கிடைத்த சில மரக்கறிகளையும் நிவாரணமாகத் தரப்பட்ட அரிசியை கழுவி உலையில் போட்டுக் கொண்டிருந்தார்.

அவருக்கு இரண்டாவது திருமணத்தின் பொழுது பிறந்த பெண் குழந்தையும், முதலில் பிறந்த பெண் குழந்தையும், இரண்டாவது கணவனும், சகோதரனும் இறுதி யுத்ததில் பலியாகியிருந்தார்கள்.

அவரது தலையுள்ளும் பீரங்கிச் சிதறு துண்டுகள் நுழைந்த நிலையில் எடுக்க முடியாதிருக்கின்றன.

மறதிகளும் அழுகைகளும் என்று இன்று தனித்துப்போயிருக்கிறார்.

சகோதரனை இழந்த துக்கத்தில் எப்பொழுதும் அழுது புலம்பும் தாயுடன் அவர் சிதைந்து போன வீட்டை மீள பொறுக்கி கட்டிக்கொண்டிருக்கிறார்.

இதுவரையில் அவர் முகாமிலிருந்து விடுவிக்கப்படவில்லை.

தடுப்பு முகாமில் இருந்து இரண்டு நாட்கள் அம்மாவுடன் தங்க அனுமதி கேட்டு வந்த அவர் மறுநாள் தடுப்பு முகாமுக்கு திரும்ப வேண்டும்.

தனக்கு கண்கள் வேண்டாம் என்று கூறிக்கொண்டேயிருந்தார்.

வாழ்வை தொடங்க வாழ பிடிப்பற்று பேசிக்கொண்டிருந்தார். தன் குழந்தைகளையும் பறிகொடுத்த வேதனையை சொல்லிக் கொண்டிருந்தார்.

நடந்து வரும் பொழுது மூத்த குழந்தை பீரங்கி குண்டு பட்டு அப்படியே இறந்து விழுந்து விட்டது எனவும் கடைசிக் குழந்தை காயத்துடன் தூக்கி வைத்திருந்த பொழுது கையிலேயே இறந்து விட்டது எனவும் சொல்லிக்கொண்டிருந்தார் அவரது தாயார்.

அந்த குழந்தைகளின் புகைப்படத்தை எடுத்து பார்த்துக் கொண்டேயிருந்தார்.

எந்த வருமானமும் அற்ற நிலையில் தந்த நிவாரணப் பொருட்களை அவித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தந்த தகரங்களை ஒரு சில தடிகளில் பொருத்தி விட்டு இருக்கிறார்கள்.

எங்கும் பற்றைகள் தான் வளர்ந்து காடாகியுள்ளது. முகாமிலிருந்து கொண்டு வந்த சில பொருட்கள் வெளியில் கிடக்கின்றன.

வந்திருக்கும் மக்கள் எல்லோருமே கொண்டு வந்த பொருட்களை மரங்களின் கீழாகவும் தகரத்திற்கு கீழாகவும் போட்டு விட்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

சமர்கள் நடந்த இடம் என்பதால் மண்மூடைகளும் மண் அரண்களும் எங்கும் கிடக்க குண்டுகளில் நிலம் எரிந்து போயிருந்தது.

அந்த நிலத்தில் என்ன பயிரை நாட்ட முடியும்....? என்னுடன் வந்த கிளிநொச்சி கணேசபுரத்தை சேர்ந்த நண்பன் இவற்றையெல்லாம் எப்பொழுது உழுது விதைக்க முடியும் அதற்கு அனுமதி எப்பொழுது கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டு வந்தான்.

வன்னி மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியிருக்கும் மக்கள். கையில் பணம் இல்லை. விவசாய உபகணரங்கள் இல்லை. கைவிடப்பட்ட தொழிலை எப்படி தொடங்குவது என்று தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

கிளிநொச்சி நகரத்தில் சில கடைகள் இப்பொழுது மீள திறக்கப்பட்டிருக்கின்றன. அங்கு தமிழில் எழுதப்பட்ட கடைகளின் பெயர்களை வெள்ளை வண்ணம் பூசி படையினர் மறைத்து அழித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் அலுவலகங்கள் உருத்தெரியாமல் சிதைக்கப்பட்டுள்ளதுடன் அவைகளை படையினர் தம் சொந்த தேவைகளுக்கு எடுத்துள்ளனர்.

எப்பொழுது வன்னி நிலத்தில் இயல்பு வரும் என்று தெரியவில்லை. அங்கு எப்பொழுது மக்கள் முழுமையாக அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரியவில்லை.

முழுக்க முழுக்க படைகளின் கட்டுப்பாட்டில் அல்லது ஆட்சியில் வன்னி இருக்கிறது. அவர்களின் முழுப் பாவனையில் இருக்கிறது.

தமிழர்களின் நிலமை இப்படியிருக்க சிங்களவர்கள் நாளுக்கு நாள் நிமிடத்திற்கு நிமிடம் வடக்கை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிங்களவர்களுக்கு வடக்கு, பார்க்கத் துடிக்கும் சுற்றாலாத் தளமாக தென்படுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வன்னி என்று எங்குமே சுற்றுலா வரும் சிங்களவர்களின் மயமாகவே இருக்கிறது.

சிங்களவர்கள் இங்கு வந்து பார்ப்பவை எல்லாம் யுத்ததில் சிதைந்த நிலத்தையும் அதில் பாதிக்கப்பட்ட மனிதர்களையும் தான்.

முழுக்க முழுக்க முப்பதாண்டு யுத்த சிதைவுகளுடன் இருக்கும் ஈழத்தை அவர்கள் பார்க்கிறார்கள். அவைகளில் தங்கள் படைகள் நிகழ்த்திய வீரதீரங்களைப் பார்க்கிறார்கள்.

அகதிகளாக அலையும் மக்களைப் பார்க்கிறார்கள். அங்கங்களை இழந்து வலியுறும் மக்களை அவர்கள் பார்க்கிறார்கள்.

இப்படி சுற்றுலா வரும் சிங்கள மக்களை பெரும் குதூகலத்துடன் அவர்களின் படைகள் வரவேற்கின்றனர். சிங்கள மக்களும் பெரும் மகிழ்ச்சியுடன் படைகளை சந்திக்கிறார்கள்.

அவர்கள் ஒரு பௌத்த நிலத்திற்கு வருவதைப்போல உணருவார்கள். அவர்கள் ஒரு பௌத்த நகரத்திற்கு வருவதைப்போல உணருவார்கள்.

அல்லது ஒரு சிங்கள நிலத்திற்கு வருவதைப்போல உணருவார்கள். அவர்கள் ஒரு சிங்கள நகரத்திற்கு வருவதைப்போல உணருவார்கள்.

வன்னி நிலமெங்கும் புத்த சிலைகளை படையினர் நட்டு வைத்திருக்கிறார்கள். அங்கு வழிபாடுகள் நாள் தோறும் நடைபெறுகின்றன.

விடுதலைப் புலிகளிடமிருந்து வன்னி நிலத்தை கைபற்றிய உடனே இந்த புத்த சிலைகளை நாட்டுவதில் படையினர் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள்.

யாழ்ப்பாணம் நாகவிகாரை, நயினாதீவு விகாரை, மாதகல் விகாரை என்று பல இடங்கள் சிங்களவர்கள் வந்து வழிபடும் சுற்றுலாத் தலங்களாக மாறியிருக்கின்றன.

எமது மக்கள் இன்னும் வீடுகளுக்கு திரும்பவில்லை. அவர்களுக்கு வீடுகளும் இல்லை. சிதைந்து உருத்தெரிமல் கிடக்கிறது வாழ்வு. எப்படி எதை வைத்து தொடங்குவது என்று தெரியாத கையறு நிலையில் இருக்கிறார்கள்.

கால்வாசி மக்களை தவிர மீதி மக்கள் வன்னி நிலத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.

தெரு ஓரங்களில் அனுமதிக்கப்பட்ட மக்கள் தகரங்களை நிலத்தில் நட்டு அதற்குள் வாழ்கிறார்கள். புழுதியும் வெக்கையும் நுளம்பும் இருட்டும் என்று வாழ்க்கை பயங்கரமானதாக தொடருகிறது

இந்தியாவிற்கு புலிகளால் ஆபத்து இல்லை நரிகளால் தான் ஆபத்து

மார்ச் 13 ஆம் திகதி இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் தமிழ் நாட்டுக்கு வந்திருந்தனர். சட்ட மன்ற கட்டடதொகுதியினை திறந்து வைப்பதற்காகவே சோனியா காந்தி, மன்மோகன் சிங்க் ஆகியோர் வந்தனர்.

இவர்களின் வருகையினை ஒட்டி விசேட வேவுகள், தரவு சேகரிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. வழமையாக எதற்கெடுத்தாலும் புலிகள் மீது பழி சுமத்தும் எண்ணம் எள்ளளவும் இந்திய பிசாசுகளுக்கு விட்டுபோகவில்லை. ஆகையால் சோனியா காந்தி, மன்மோகன் சிங்க் ஆகியோர் வரும் காலப்பகுதியில் புலிகள் யாராவது ( ஈழ தமிழர்கள்) அந்த பகுதிக்கு புதிதாக வந்துள்ளார்களா என பொலிசார் துருவி துருவி விசாரித்ததில் 06 ஈழத்தமிழர் வலசரபாக்கத்திற்கு வந்துள்ளதை மணந்து பிடித்துள்ளனர். இவர்களுக்கு புலிசாயம் இட்டு வழமையாக தங்களின் விசாரணைகள், கட்டுக்கதைகள், புரளிகள் ஆகியவற்றை தயார் செய்து அதிகாரிகளுக்கும் அனுப்பி கொண்டிருக்கும் வேளையில் தான் இன்னும் அதிர்ச்சிகரமான தகவல்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளது.

அதாவது புலிகளின் சற்றலைட் தொலைபேசிகளை ஒட்டுகேட்பதற்காக பொலிசார் சற்றலைற் போன் ஒட்டுக்கேட்கும் கருவியினை இயக்கி கொண்டிருந்தவேளை மூன்று சற்றலைட் போன்கள் இயக்கத்தில் உள்ளதனை கண்டுபிடித்துள்ளனர். மூன்றினது அமைவிடங்களையும் தேடியபோது அந்த மூவரும் இஸ்ரேல் நாட்டினை சேர்ந்தவர்கள். பிரதமரும், சோனியாவும் தமிழ் நாட்டிற்கு வரும் வேளை இந்த மூன்று இஸ்ரேலியர்களுக்கு தமிழ் நாட்டில் என்ன வேலை? அதுவும் சற்றலைட் போனை மூவரும் வைத்திருந்ததற்கான காரணம் என்ன? விசாரணையில் அவர்கள் தாம் உல்லாசபயணிகள் என உளறியுள்ளனர் ஆனால் விசாரணை தொடர்கின்றதாம்.

அடுத்ததாக வந்த தலையிடி அமெரிக்காவுக்கு அனுப்பவென பொதி செய்யப்பட்டு இருந்த பெட்டகம் ஒன்றினை சுங்க பொலிசார் பரிசோதித்த போது அதற்குள் பல பாதுகாப்புடன் தொடர்பான வரைபடங்கள் புளூ பிரின்ற்கள் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பொதி ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான கேணல் ஹூ ஏ மேளி என்பவரால் அமெரிக்காவில் உள்ள ஒருவருக்கு முகவரி இடப்பட்டு பதிவு செய்யபட்டு இருந்தது.

இது தொடர்பாகவும் விசாரணைகள் நடக்கின்றனவாம்.

ஓ நாய்கள் புலிவேட்டையினை கைவிட்டுவிட்டு நரி வேட்டைகளில் இறங்குவதே நல்லது ஏனெனில் புலிகள் அங்கு இல்லை, இருந்தாலும் ஆபத்து இல்லை. நரிகளே அங்கு அதிகம் என்பதனை இப்போது புரிந்து கொள்ளுமா ஓ நாய்கள்.

வெள்ளி, 26 மார்ச், 2010

தமிழீழ வான் புலிகளின் முதல் தாக்குதல்(26.03.20070 மூன்றாண்டுகள் நிறைவு

கப்பல் ஓட்டினான் தமிழன் அன்று, விமானம் ஓட்டி தாக்குதல் நடத்துவான் தமிழன் இன்று என்று தமிழ் தேசியத்தலைவரின் தலைமையில் தமிழீழ விடுதலைப்புலிகள்அறிவித்த உலகுக்கு அறிவித்த நாளின் (26.03.2007) மூன்றாம் ஆண்டு இன்று.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மரபுவழிசார் படையணிகள் இருந்த போதும் கடற்படை, தரைப்படை என்ற கட்டமைப்பின்கீழ் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் படைஅணிகள் ஒருநாட்டின் படை அணி கட்டுமானத்திற்கு அமைவாக வான்படையினரை உருவாக்கிய தேசியத் தலைவர் அவர்கள், வான்புலிகள் முதன்முதல் சிறீலங்காப் படையினரின் வான்தளம் மீது தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளும் சமபலத்துடனும் சம படைநிலை வலுவுடன் இருக்கின்றார்கள் என்பதனை பன்னாடுகளுக்கு எடுத்துகூறிய தாக்குதல் நாளாக 2007 மூன்றாம் மாதம் 26ஆம் நாள் கட்டுநாயாக்கா வான்படைதளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமைகின்றது.

தமிழிழ தேசியத்தலைவர் அவர்களின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக செயற்பட்ட வான்படைஅணிகள் பின்னாக காலகட்டங்களில் சிறீலங்காப் படையினரின் இலக்குகள் மீது பல தாக்குதல்களை நடத்தி எதிரிக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தினார்கள்.

இறுதியில் வான்வழி சென்று சிறீலங்காவின் தலைமையகத்;தின் மீது வான் கரும்புலிகள் தாக்குதல் நடத்தியதில் சிறீலங்காப் படையினரிற்கு இழப்பினை ஏற்படுத்தினார்கள்.

இதில் வான்கரும்புலிகளான கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகிய வான் கரும்புலிகள் வீரவரலாறாகினார்கள்.

வியாழன், 25 மார்ச், 2010

புத்த மதம் இஸ்லாம் பற்றி ஒப்பிட்டு புத்தகம் எழுதியதற்காக போலீஸ் தடுப்பு காவலில் ஸாராஹ்

ஸாராஹ் மாலினி பெரேரா என்ற முஸ்லிம் பெண்

ஸாராஹ் மாலினி பெரேரா என்ற முஸ்லிம் பெண் இலங்கையை சேர்ந்த புத்த மத குடும்பத்தில் பிறந்து புத்த குடும்பத்தில் வளர்ந்த சிங்கள இன பெண் இவர் இஸ்லாத்தை டிஸ்கவர் இஸ்லாம் நிகழ்ச்சிகளின் ஊடாக் கற்றதன் மூலம் 1999 இல் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் இவர் தற்போது பஹ்ரைன் நாட்டின் பாடசாலை ஒன்றின் ஆசியராக தொழில் புரிகிறார்

இவர் விடுமுறையில் இலங்கை வந்து இஸ்லாம் மற்றும் ஏனைய மதங்கள் பற்றி ஒப்பிட்டு ஆய்வு செய்து இரண்டு புத்தகங்களை சிங்கள மொழியில் பதிப்பு செய்துள்ளார் இந்த புத்தகங்கள் புத்த மதத்தை நித்திப்பதாக கூறி மிரிஹான போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கபட்டுள்ளார்

இவரின் சகோதரி மரியம் இது பற்றி கூறுகையில் இவர் இஸ்லாத்தை தழுவி கொண்ட கால பகுதியில் இருந்து இஸ்லாத்தையும் மற்ற மதங்களையும் ஒப்பிட்டு நூல் ஒன்றை எழுதிகொண்டிருந்தார் என்றும் எழுதும் பணி கடந்த வருடம் நிறைவடைந்ததாகவும் -2009 - விடுமுறையில் இலங்கை சென்ற ஸாராஹ் மாலினி பெரேரா தனது சிங்கள மொழி புத்தகங்களான ஒன்று From Darkness to Light இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு என்ற தலைப்பிலும் இரண்டாவது Questions and Answers கேள்விகளும் பதில்களும் என்ற தலைப்பிலும் எழுதியிருந்தார் அவற்றை புத்தகங்களாக பதிப்பு செய்து அவற்றில் ஒரு பகுதியை கார்கோ முகவர் ஒன்றின் ஊடாக அனுப்பும் வேளையில் குறித்த கார்கோ முகவர் நியையத்தின் உரிமையாளர் போலீசாரை அழைத்து இந்த புத்தகங்கள் லார்ட் புத்தாவுக்கு எதிரானவை என்று முறையிட்டுள்ளார் இவர் தீவிர இனவாத அமைப்பான சின்ஹல உரிமையவுடன் தொடர்பு கொண்டவராக இருக்கலாம் என்று மரியம் கூறியுள்ளார்

மேலும் இவர் கூறும்போது குறித்த இனவாதிகள் ஸாராஹ்வின் வழக்கை நீதிமன்றத்துக்கு பாரம் கொடுபதற்கு முன்னர் 24 மணித்தியாலங்கள் போலீஸ் காவலில் வைக்க போலிசை நிற்பந்திபதாகவும் கூறியுள்ளார் ,
இந்த விடையம் தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகள் , முஸ்லிம் அரசியல் வாதிகள் ,பொது அமைப்புகள் , மனித உரிமை அமைப்புகள் தலையிட்டு ஸாராஹ்வின் விடுதலைக்கு உடன் உதவ வேண்டும்

ஸாராஹ் ஆசிரியர் தொழில் புரிவதற்கு முன்னர் பஹ்ரைன் நாட்டின் நிலை கொண்டுள்ள அமெரிக்கன் கடல் படையில் கணக்காலராகவும் தொழில் புரிந்துள்ளார் இவரின் பெற்றோர் சகோதரிகள் அனைவரும் வெவ்வேறு கால கட்டங்களில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் இவரின் குடும்ப உறுபினர்களான தந்தை நோர்பெத் பெரேரா , தாய் சோமா, சகோதரிகள் பட்மா , ரஸா. பட்மணி ,மாலினி இவர்கள் குடும்பமாக பஹ்ரைன் நாட்டில் வசிகின்றார்கள் ஸாராஹ்வின் தந்தை சில மாதங்களுக்கு முன்னர் வபாதாகியுள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் www.gulf-daily-news.com என்ற பஹ்ரைன் நாட்டின் இணையத்தளத்தில் இன்று வெளியான விபரங்கள்


http://usa-learning.blogspot.com/2010/03/blog-post_25.html

மீட்டெடுப்போம் களப் போராளிகளை -கண்மணி.

வீர வரலாற்றை வாசிக்கும்போது நமக்கெல்லாம் உணர்வு சிலிர்த்தது. ரத்தம் கொதித்தது, மகிழ்ச்சி பொங்கியது. அடடா… தமிழனின் வீரம் தரணியெங்கும் கொட்ட, எமது தமிழ் குலக் கொடிகள் களம்காணும் காவியம் வரலாறாய் அல்ல, நம் கண்முன்னே வரிவரியாய் வாசிக்கிறோமே என்று புலங்காதிகப்பட்டோம். நாம் அந்த வார்த்தைகளை கேட்டபோது, எண்ணங்களெல்லாம் எழுச்சியாய், எரிதழலாய், ஏற்றமிகு தமிழ் உணர்வை எமது உச்சி முதல் உள்ளங்கால்வரை பெரும் அனலாய் பரப்பியது. அவர்கள் ஆயுதம் ஏந்துகிறார்கள் என்கிற வார்த்தைகள், எம்மையும் அறியாமல் எமது விரல்களை அசைத்துப் பார்த்தது.
தமிழனின் அடையாளம் இதோ, அங்கே புதுப்பொலிவுடன் புத்தெழுச்சியாய் புறப்பட்டிருக்கிறது. புலிக்கொடி உலகெங்கும் புது வரவை பறைசாற்றுகிறது என்றெல்லாம் நாம் துள்ளி குதித்தோம். ஒரு நாளா? இரு நாளா? முப்பது ஆண்டு காலம் எமது தேசத்தை முன்னிருத்தி அதை கட்டிக் காக்கும் சமரிலே தமது உடலை, உயிரை குறித்து துளியேனும் வருத்தமின்றி, துள்ளிகுதித்து களத்திற்கு சென்ற என் கண்மணிகள் இன்று எங்கே? மனதிற்குள்ளே மழை பெய்கிறது. அது கண்ணீர் மழை. குருதி மழை. குற்ற உணர்வு குடைந்தெடுக்கிறது. எந்த காவியத்தை எமது கண் முன்னால் கண்டோமோ, அந்த காவியத் தனல்கள் இதோ, இன்று சிங்களனின் வேட்டைக்காடாய் உருமாறி இருக்கிறது.
நம்மை கண்டு அஞ்சி, நடுங்கி ஓடிய சிங்கள நாய்கள், எமது புலிகளை அடிமையாய் வைத்திருக்கிறது. வரிப்புலிகளாய் களத்திலே வீறுகொண்டு எழுந்த அந்த வரலாற்று வரிகள் இன்று சிங்கள காடைகளின் முன்னால் புழுதியாய் அடைக்கப்பட்டிருக்கிறது. வீர வித்துக்களாய், தமது தேசத்திற்காக புதைந்து போக முனைந்த புலிகளின் கூட்டம் சிறப்பு பாதுகாப்பு சிறை என்னும் அடக்குமுறை கொட்டடியில் ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. ஓங்கி அறைந்து எமது தேசத்தின் குரலை எதிரொலித்த அந்த வீர வரலாறுகள் இன்று தமது உடலையும், மனதையும் எப்படி தேற்றிக் கொள்வதென்று தெரியாமல் முடங்கி, ஒடுங்கி போயிருக்கிறது.
என்ன பாவம் செய்தார்கள்? கொள்ளை அடித்தார்களா? கொலை செய்தார்களா? மோசடி செய்தார்களா? அல்லது நாட்டை சுரண்டினார்களா? பெண்கள் மீது பாலியல் வக்கிரங்களை கட்டவிழ்த்தார்களா? என்ன காரணம்? என்னத்தான் காரணம்? சிந்திக்கும்போதே நம்முடைய எண்ணங்கள் சிதறிபோகிறது. வண்ணமயமான தமிழீழத்தை, வரலாற்று சிறப்பு மிக்க ஒரு நாட்டை, தமிழனுக்கான ஒரு மண்ணை, தமிழரின் மானத்தை, தமிழனின் கோட்டையை, சிங்கள காடையர்களுக்கு முன்னால் கட்டி எழுப்ப வேண்டும் என்ற வேட்கை உங்களையும் என்னையும் காட்டிலும் கொஞ்சம் கூடுதலாக இருந்ததே, அதுதானே அவர்கள் செய்த பாவம்.
இந்த மண்ணிற்காக, மானத்திற்காக, செத்துப் போக தயாராக தமது உடலிலே குண்டுகளை கட்டிக் கொண்டு, காற்றிலே சிதறிப்போக சித்தமாய் இருந்தார்களே சிரித்த முகத்தோடு, இதுதானே அவர்கள் செய்த துரோகம். அட தமிழகமே! தமிழ் நாடே! தமிழரின் பெயர் காக்க, தமிழ் மண்ணின் வீரம் காக்க, தம்மையே இழப்பதற்கு துணிந்த அந்த போராளிகள், இன்று துப்பாக்கி முனையிலே அடிமைகளாய், அடக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்களே. அதைக்குறித்த உமது விமர்சனம் தான் என்ன? உனக்காகவும் எனக்காகவும் தானே அவர்கள் உறுதியோடு களம் கண்டார்கள்.
உனது குழந்தையும், எனது குழந்தையும் மகிழ்ச்சியோடு விடுதலை காற்றை சுவாசிக்க வேண்டும் என்றுதானே அவர்கள் தமது உயிர்காற்றை நிறுத்திக் கொள்ள துணிந்து வந்தார்கள். அதற்காகத்தானே இன்று அவர்கள் அந்த சிங்கள அடிமைகளாய் சிறைகளிலே துயரை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை மீட்டெடுக்க நீயும், நானும் என்ன செய்து கொண்டிருக்கிறோம். நன்றி கெட்டத்தனமாய் இன்னமும்கூட நாம் கடந்த காலங்களை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பதும், நிகழ்கால மகிழ்விலே கரைந்து போவதுமாய் நமது வாழ்வு நகர்வதை நினைத்தால் கனத்துப்போகிறது மனம். என்ன பாடுபடுகிறார்களோ, எத்தனை முறை அந்த சிங்கள நாய்கள் எமது வீரப் புலிகளை அடித்து துன்புறுத்துகிறார்களோ, புலிகளின் ரத்தம் அந்த தரைகளை எப்படி நனைத்து அழுகிறதோ, அய்யகோ! நினைப்பதற்கே வேதனையாக இருக்கிறது.
நீயும் நானும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காகத்தானே இந்த நீங்கா துயரை அவர்கள் மகிழ்வோடு ஏற்றார்கள். உன் துயர், என் துயர் போக்க களம் கண்ட அந்த மாமனிதர்களின் துயர் நீக்க, நீயும் நானும் என்ன செய்து கொண்டிருக்கிறோம். நினைத்துப் பார்த்தோமா? அவர்கள் தமது மக்களின் நல்வாழ்வு ஒன்றே லட்சியம் என்று வாழ்ந்தவர்கள் அல்லவா? தமது தேசத்தின் மானம் ஒன்றே பெரிதென்று எண்ணியவர்கள் அல்லவா? அந்த வீர வரிப்புலிகளின் வரலாறு சிங்கள துப்பாக்கிகளுக்கு முன்னால் துவண்டு கிடக்கிறது. எது நடக்கக் கூடாது என்பதற்காக எமது தேசிய தலைவர் களம் அமைத்தாரோ, இதோ அது அவரது கண்முன்னாலேயே நடந்து கொண்டிருக்கிறது.
எது நடக்கக் கூடாது என்பதற்காக பெண்களை சீருடை அணிய வைத்தாரோ, இதோ அது அவர் வாழும் காலத்திலேயே நடக்கிறது. நினைவுகளை மட்டுமல்ல, நிம்மதியிழந்து தவிக்கிறோம். திறந்த வெளி முகாமிலே எமது மக்களின் வாழ்வு, பிச்சைக்காரர்களைவிட கேவலமாக நிகழ்ந்து கொண்டிருந்ததை நினைத்து நினைத்து கதறினோம். நீங்காதா இந்த துயர் என்று நாம் மனங்களை அந்த மண் மேட்டை நோக்கி திரும்ப செய்தோம். ஆனால் நாம் விரும்பியது எதுவுமே நடக்கவில்லை. சிங்களன் தொடர்ந்து நம்மை சிறுமைபடுத்திக் கொண்டிருக்கின்றான். நமது வாழ்வின் வளமும், நமது சொல்லின் குணமும், அதோ அங்கே முடக்கப்படுகிறது.
இங்கு தமிழ் பேசுகிறாய், தமிழ் தேசியம் பேசுகிறாய், தமிழரின் வாழ்வு பேசுகிறாய், தமிழரின் நிலை உயர்வுக்காய் நீ-நான் என மேடை போட்டு குரல் எழுப்புகிறாய். எம் வீரப்புலிகளின் குரல்வலை முறிக்கப்படுகிறதே, அதை குறித்த கவலை, அதை குறித்த அக்கறை, நமக்குள் எப்போது எழும். எதை வீழ்த்த வேண்டும் என்பதற்காக நாம் வீறுகொண்டு எழுந்தோமோ அது நம்மை வீழ்த்தி வெற்றி கொடி கட்டியிருக்கிறது. எதை ஒழிக்க வேண்டும் என்று நாம் குரல் கொடுத்தோமோ, அது நம்மை ஒழித்துவிட்டு அகங்காரமாய் சிரிக்கிறது. ஆனால் இன்னமும் நமக்குள் ஒருமை இல்லை. இன்னமும் நமக்குள் இணைவு இல்லை.
ஆளாளுக்கு ஒரு அரசியல், அரசியலுக்கு ஒரு கூட்டணி, ஆனமட்டும் நமது தன்னலத்தை உயர்த்திக்கொள்ள இடைத்தேர்தல்களில் மூழ்கி இருக்கிறோம். தமிழ் தேசியம் என்பது நமக்கு ஊறுகாயாகி விட்டது. தமிழரின் வாழ்வும், தமிழனின் மானமும் நமக்கு சோறு அல்ல. அது சுவைக்க குடிக்கும் பானமாகி விட்டது. நம்மை நாம் இழந்து விட்டோம். நமக்கான அடையாளத்தை, நமக்கான உணர்வை நமது எண்ணங்களை நாம் அந்த முள்ளி வாய்க்காலிலே போட்டு புதைத்துவிட்டோம். நமக்குள் இருந்த நம்பிக்கை நமுத்துப் போய் விட்டது.
நாம் நம்மை நினைத்தே கேவலப்பட்டுவிட்டோம். நமது கோபமெல்லாம் கொன்றொழிக்கப்பட்டுவிட்டது. நமது வீரமெல்லாம் செத்து போய்விட்டது. இல்லையெனில் கொத்து கொத்தாய் எமது குல கொடிகள் சிங்கள அடிமைகளாய் இருக்க நாம் மட்டும் சுக வாழ்வு வாழ எப்படி மனம் வரும்? நம்மால் எப்படி உறங்க முடிகிறது? எப்படி குடிக்க முடிகிறது? நம்மால் எப்படி சிரிக்க முடிகிறது? நாம் சிறுமைபடக்கூடாது என்பதற்காக தமது உயிர், பொருள் அனைத்தும் ஈகப்பொருளாய் அடகு வைத்த அந்த எம் குலக் கொழுந்துகள் அடிமைகளாய் இருக்கும் போது, நாம் எங்கிருந்து விடுதலை காற்றை உணர முடியும். புரியவில்லை.
இது எதற்கான தொடக்கம் என்பது, இன்னமும் விளங்கவில்லை. எமது தேசம் மட்டுமல்ல, எமது மானமும் அடகு போய்விட்டது. எமது வீரமும் அடகுபோய்விட்டது. அன்னியனிடம் மண்டியிட முடியாது என்பதற்காகத்தானே அவன் எல்லாளனாய், எரிதழலாய் எழுந்து நின்றான். எமது தேசத்தை விடுதலை உணர்வோடு வாழ வைக்க வேண்டும் என்பதற்காகத்தானே தமது வாழ்க்கையின் பெரும் பகுதியை காடுகளிலும், தமது வாழ்வின் சுகங்களை ஈகத்திலும் செலவழித்தான். உலகெங்கும் வாழும் தமிழனுக்கு தலைசாய்க்க இடம் வேண்டும் என்பதற்காகத்தானே தான் ஒருபோதும் தலை சாய்க்காமல் உழைத்து உழைத்து நம்மையெல்லாம் ஒருங்கிணைத்தான்.
அந்த தேசிய தலைவனின் எண்ணங்களை, அவரின் ஏற்றமிகு சிந்தனைகளை, நமது விடுதலைக்கான உணர்வுகளை நாம் உணர்ந்தவர்களாய், அதற்கு உயிர் கொடுப்பவர்களாய், உறங்காமல் உழைக்க வேண்டிய இந்த தருணத்தில் நமது நிலைகளை மறந்து, நமது நினைவுகளை இழந்து, தன்னலமாய் அணி அணியாய் பிரிந்து களத்திலே இருக்கிறோம். இது மேலும் நமது இனத்திலிருந்து நம்மை அந்நியப்படவே செய்யுமே தவிர, நிச்சயமாய் அது நம்மை காக்கும் களமாகாது. இப்போது நமது முதல் பணி, எமது குலக் கொழுந்துகளை அந்த அடிமை கொட்டடியிலிருந்து மீட்டெடுப்பது. அதற்கான அரசியல் நகர்வுகள் என்ன என்பதை சிந்திப்பது.
தேர்தலால் நாம் சாதிக்க முடியாது என தெரிந்திருந்தும்கூட, களத்திலே நாம் வாக்கு சேகரிக்க வலம் வருவதிலிருந்து விலகி, நமது தேச விடுதலைக்கான போராளிகளை விடுவிக்க என்ன செய்யலாம் என்பதை சிந்திக்கும் காலத்தில், கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதை நாம் நாளை, அல்லது மறுநாள் என்று தள்ளிப்போட முடியாது. நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் எமது தேசப் போராளி குருதி குளத்திலே அங்கே செத்துக் கொண்டிருப்பான். நாம் நாளை என்று நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும் எமது பெண் புலி, அங்கே சிங்களின் வேட்டை ஆடாய் சிக்கி, சீரழிந்து கொண்டிருப்பாள். எமது தங்கைகள், எமது சகோதரிகள், எமது தேசத்தை விடுவிக்க வேண்டும் என்கிற எழுச்சிமிக்க எண்ணத்தை தவிர, வேறு என்ன அவர்கள் விரும்பினார்கள். உங்களையும் என்னையும் காட்டிலும் அவர்கள் கூடுதலாக இந்த மண்ணையும், இந்த மண்ணின் மானத்தையும் நேசித்தார்களே, அதற்கான பரிசைத்தான் அவர்கள் இப்போது சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களை விடுவிக்க, அவர்களை காப்பாற்ற, இவர்களை தலைமேல் சுமக்க, தமிழர்கள் என்று சொல்லக்கூடிய ஒவ்வொருவனும் தவறுவானேயானால் நிச்சயமாக இந்த வரலாறு அல்ல, எந்த ஒரு வரலாறும் நம்மை மன்னிக்காது. நாம் இப்போது களத்தில் இருப்பது புலிகளை விடுவிக்க. நமது தேசத்தின் பேராளிகளை விடுதலை உணர்வோடு வாழ வைக்க. உடனே களம் காண்போம். நமக்கு உயிர் கொடை தந்த அந்த மாவீரர்களின் மனங்களை குளிரச் செய்ய நமக்கு இது காலம் கொடுத்த அருட்கொடை. மாற்றமில்லாமல், மனம் மாறாமல் உடனே வருவோம். வாருங்கள். மீட்டெடுப்போம் எமது களப்போராளிகளை.


http://www.eelamwebsite.com/

இலங்கை அரசுக்கான ஆதரவினை விலக்கிக்கொள்ள இந்தியா திட்டம்?

இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு இலங் கைக்கு ஆதரவான நாடுகள் உட்பட பன்னாட்டு சமூகம் ஒரு வரைய றைக்கு அப்பால் இலங்கைக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என வும் இந்தியா, சீனா உட்பட இலங்கைக்கு நெருக்கமான நாடுகளும் மேற்குலகைப் பகைக்காமல் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் சாத்தியக் கூறுகளே காணப்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பதற்கு முடிபெடுத்திருப்பது தொடர்பில் இலங்கைக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் அணிசேரா நாடுகள் பான் மூனுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு அணிசேரா நாடுகள் அனுப்பி வைத்துள்ள இந்த எதிர்ப்புக் கடிதத்திற்கு ஆதரவு வழங்குவ தாக பகிரங்கமாக அறிவிக்கவும் இல்லை, இலங்கைக்கு ஆதரவாக தனது கருத்தினை வெளியிடவும் இல்லை.

இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணைகள் விடயத்தில் மேற்குலகம் தற்போது மிகுந்த சிரத்தைக் காண்பிப்பதனால் இந்த விவ காரத்தில்தான் இனிமேலும் இலங் கைக்கு ஆதரவளிப்பதாக அறிவி த்து மேற்குலகினைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் இந் தியா மிகுந்த அவதானமாகச் செயற்படுகின்றது. இது இவ்வாறிருக்க இலங்கை க்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்த பல அணிசேரா நாடுகளே ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கான கடிதத் தில் கையயழுத்திடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கைக்கு மிகவும் நெருக்கமான நாடான லிபியாவின் பேச்சாளர் ஒருவரிடம் போர்க் குற் றங்கள் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளிக்காமல் அந்தக் கேள்விக்கான பதிலை இலங்கையிடமோ அல்லது ஐ.நா விடமோ கேட்கும்படி கூறி நழுவி யுள்ளார்.

என்னை பற்றி நிறைய படம் வெளிவரும் - யுவராணி புகார் / விளம்பரம் ?

இணையத்தளங்களில் என் பழைய படங்கள் மட்டுமே வந்துள்ளன. என்னை பற்றிய வேறு படங்கள் எதுவும் வெளிவந்தால் அதை போலீசார்தான் தடுக்க வேண்டும் என்று நடிகை யுவராணி கூறியுள்ளார்.

நடிகை ரஞ்சிதாவைத் தொடர்ந்து, நித்யானந்தனுடன் நடிகை யுவராணியை இணைத்து தெலுங்கு சேனல்கள் பரபரப்பாக செய்திகளையும் சில படங்களையும் வெளியிட்டன. நித்யானந்தனுடன் யுவராணி உள்ள ஆபாச வீடியோ வெளியாகி உள்ளதாக அந்த செய்திகளில் கூறப்பட்டது. ஆனால் இதுவரை வீடியோ எதுவும் வெளிவரவில்லை.

இந் நிலையில் நித்யானந்தனுடன் தான் இருப்பது போன்ற படங்களோ, வீடியோ வெளிவராமல் போலீசார் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையோடு யுவராணி சென்னை போலீஸ் கமிஷனரை நேற்று சந்தித்தார். அவருடன் அவர் சார்ந்த சாதிச் சங்கப் பிரமுகர்களையும் அழைத்து வந்திருந்தார்.

நேற்று மாலை 6.30 மணியளவில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் வெளியில் வந்த அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நித்யானந்தாவோடு என்னை இணைத்து கூகுள், யு டூப் ஆகிய இணையத்தளங்களில் செய்திகள் வெளியானதாக எனது உறவினர்கள் எனக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக நானும் அந்த இணையத்தளங்களை பார்த்தேன். அதில், தவறான படங்கள் எதுவும் வெளியாகவில்லை. என்னுடைய பழைய படங்கள்தான் வெளியாகியுள்ளன.

இனி என்னைப் பற்றிய வேறு தவறான படங்கள் எதுவும் வெளிவந்தால் அதைத் தடுக்க வேண்டும் என்று கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். தனிப்பட்ட முறையில் நான் யார் மீதும் புகார் கொடுக்கவில்லை. கமிஷனரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

என்னுடைய கணவரோடு கலந்து பேசி விரைவில் பத்திரிகை நிருபர்களை சந்தித்து விளக்கமாக பேட்டியும் கொடுப்பேன் என்றார் யுவராணி


பழைய நடிகைகளுக்கு ரி என்ட்ரி க்கு நடக்கும் விளம்பரமா?

வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணி முடிவுக் கட்டத்தை நெருங்குகிறதாம் சிறிலங்கா அரசு கூறுகிறது

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் நிறைவடையும் கட்டத்தை அடைந்திருப்பதாக சிறிலங்கா அரசின் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் நிலையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

“மீள்குடியமர்வை துரிதப்படுத்தும் நோக்கில் வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

கண்ணிவெடிகளில் சிக்கி அண்மைக்காலத்தில் 480 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

ஏழு அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களும், ஆயிரம் இராணுவ பொறியியலாளர்களும் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் உள்ள ஏ-9, பி-69, பி-35 ஆகிய வீதிகளின் இரு பக்கங்களிலும் இருந்த கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டுள்ளன.

கொக்காவில், கிளிநொசசி ஆகிய பகுதிகளிலும், பரந்தன் தொடக்கம் முகமாலை வரையான பகுதிகளிலும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.

183,219 இடம்பெயர்ந்த மக்கள் கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட தமது சொந்தக் கிராமங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஏனைய 84,700பேர் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் விரைவில் மீளக்குடிமயர்த்தப்படுவர்.

இடம்பெயர்ந்தவர்களில் 29,000 பேர் முகாம்களுக்கு வெளியே சென்று தங்கியுள்ளனர். 54,000 பேர் மட்டும் இன்னமும் முகாம்களில் தங்கியிருக்கின்றனர்” என்று இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு நீண்டகாலம் எடுக்கும் என்று கூறி வந்த சிறிலங்கா அரசாங்கம் திடீரென இப்போது அது முடிவடையும் கட்டத்தை அடைந்திருப்பதாகக் கூறியுள்ளது.

இது தேர்தல் காலத்தந்திரம் என்றே கருதப்படுகிறது.

அத்துடன் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க நேற்று தகவல் வெளியிட்ட போது மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள மூன்று பிரதான வீதிகளின் இருபுறமும் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விட்டதாக கூறியிருந்தார்.

ஆனால் அந்த மூன்று வீதிகளில் இரண்டு வன்னிப் பகுதியில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பெயரிடப்பட்ட பி-69 வீதி எனப்படுவது, புவெலிக்கடவுக்கும் லெவெல்லவுக்கும் இடையிலான 1.3கி.மீற்றர் நீளமான வீதியாகும்.

அடுத்து பி-35 என்பது, படல்கும்புர - புத்தல - செல்லக்கதிர்காமம் வீதியாகும்.

இவை அம்பாந்தோட்டை, மொனராகல மாவட்டங்களில் உள்ளவை.

இராணுவப் பேச்சாளர் கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கை குறித்து தவறான தகவல்களை வெளிப்படுத்த முனைவதாகவே கருதப்படுகிறது.

கடந்த வாரம் இந்தியப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்த, வன்னில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் ‘சர்வத்ரா’ என்ற தொண்டர் நிறுவனத்தின் பேச்சாளர், கண்ணிவெடிகளை அகற்றும் தமது பணி அங்குலம் அங்குலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறியிருந்தார்.

தினமும் 8 தொடக்கம் 10 வரையிலான சதுர மீற்றர் பரப்பளவுள்ள பிரதேசத்திலேயே சராசரியாகத் தம்மால் கண்ணிவெடிகளை அகற்ற முடிவதாகவும் அந்த அதகாரி கூறியிருந்தார்.

இந்த நிலையில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முடிவுக் கட்டத்தை நெருங்குவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் கூறியிருப்பது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

புதினப்பலகை

லெமூரியாவின் தொன்மை உலகறியச் செய்யப்படுமா?

கோ. முத்துகுமார்


கோடிக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்தாலும் தமிழின் சொல்வளம் கணக்கிட இயலாத ஆற்று மணலைப் போன்றது. இனிக்கும் தமிழ் மொழிக்கு சிறப்புச் சேர்க்கும் வகையில் தமிழக அரசு கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துகிறது.

தமிழன்னைக்கு அவர்தம் புதல்வர்களால் ஏற்கெனவே காப்பிய அணிகலன்கள் அணிவிக்கப்பட்டுள்ளன. அவர்களின் வழியில் தங்களின் சிந்தனையை பலநாள் வடிகட்டி தமிழறிஞர்கள் தரப்போகும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக் கட்டுரைகள் சின்னஞ்சிறு மலர்களாய் தமிழன்னையின் பாதத்தில் போய்ச் சேரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

பன்னாட்டுத் தமிழறிஞர்கள் ஒரே அரங்கில் திரளப் போகும் இம்மாநாட்டில், பலவித அரங்குகளையும், அலங்கார ஊர்திகளையும் மக்களின் பார்வைக்காக வைக்க அரசு முயற்சித்து வருகிறது. பொருள் பொதிந்த எழுத்து களைச் சுமந்து நிற்கும் ஓலைச்சுவடிகள், தொன்மையை விளக்கும் பொக்கிஷங்களான கல்வெட்டுகளின் பங்களிப்பு இதில் மிகையாக இருப்பது அவசியம்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ் இலக்கிய ஓலைச்சுவடிகளின் அருகில் இன்றைய அதிநவீன அச்சுப் பிரதிகளையும் இடம்பெறச் செய்தால் அறிவியலின் புதுமையையும், தமிழின் தொன்மையையும் மாநாட்டில் பங்கேற்பவர்கள் ஒருசேர பார்த்து அறிய முடியும்.

ஓலைச் சுவடிகளில் எழுதும் ஆற்றல் படைத்தவர்களை இந்த அரங்கில் அமரச் செய்து, எழுதிக் காண்பிப்பதும், அக்காலத்தில் ஓலைச்சுவடிகளை மஞ்சள் பூசி பராமரித்த விதத்தை செயல்முறைக் காட்சியாக விளக்குவதும் இளைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் பலரை இம்மாநாட்டில் பங்கேற்க செய்து, தமிழகத்தில் கிடைக்கப் பெற்ற கல்வெட்டு மற்றும் செப்பேடுகளை பார்வைக்கு வைத்து, அது குறித்து விளக்கம் அளிக்கச் செய்ய வேண்டும்.

தமிழகக் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள பல வகை எழுத்துகள், அதை படித்தறியும் முறைகளை விளக்கி கல்வெட்டுகளை வாசித்தறியும் ஆர்வத்தைத் தூண்டுவது ஆரோக்கியமான விஷயம். சேர, சோழ, பாண்டியர்களின் பழங்கால நாணயங்களையும் இதனுடன் சேர்த்து வைக்கலாம். அப்போது ஒரே கல்லில் இருமாங்காய் அளவு பலன்கிட்டும்.

தமிழின் தொன்மையை உலகறியச் செய்ய வேண்டிய கடமையும் செம்மொழி மாநாட்டுக்கு உள்ளது. உலகின் முதல் தமிழன் வாழ்ந்த லெமூரியா கண்டம் பற்றி தற்போது ஆங்கிலவழிக் கல்வியில் பொதுத்தேர்வு எழுதும் நிலையை அடைந்துவிட்ட பள்ளி மாணவர்களுக்கும் தெரிவதில்லை.

லெமூரியாவில் வாழ்ந்த தமிழன் கடல்கடந்து போரிட்டு வென்றதாகவும், பிரமாண்ட கடல்வாழ் உயிரினங்களால் பெரும் துயரம் அடைந்ததாகவும் நூல்களின் வழியே அறிஞர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இவை இளைய சமுதாயத்தை சென்றடையாத நிலை உருவாகி வருகிறது. இக்கண்டம் குறித்த கல்வெட்டுகள் கிடைத்தாலும் அதில் உள்ள சித்திர எழுத்துகளைப் படித்து அறிய இயலாத நிலை உள்ளதாகத் தமிழறிஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனைப் போக்கும் வகையில் கல்வெட்டுகளில் உள்ள சித்திர எழுத்துகளை அறியும் ஆய்வுகளைத் தொடங்க தமிழக அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளில் உள்ள கல்வித் துறையில் இந்திய வரலாற்றைக் கூறும்போது, அதில் லெமூரியா கண்டம் பற்றிய தகவல்கள் மிகக்குறைவாகவே இடம்பெற்றுள்ளன. அக்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், புலவர்கள், குமரிக்கிழார் போன்ற வீரர்களின் வாழ்க்கை வரலாறு முழுமையாகத் தெரியப்படுத்தப்படவில்லை என்ற ஆதங்கம் பல தமிழ் நூல்களின் மூலம் தெரியவந்துள்ளது.

எனவே, லெமூரியா கண்டத்தின் வரலாறுகளைத் தமிழகப் பாடநூல்களில் விரிவாகச் சேர்க்க தமிழக அரசு ஆணையிட வேண்டும். இணையதளம் மூலமோ புதிய பல நூல்கள் வாயிலாகவோ முதல் தமிழர்கள் மற்றும் அவர்களின் வரலாறுகள் உலகம் முழுவதும் சென்றடைய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தகுந்த தீர்வு ஏற்படுத்தலாம்.

லெமூரியா கண்டம், அதுசார்ந்த கல்வெட்டு ஆராய்ச்சிகள், பல நாட்டு தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துகளைத் தொகுத்து பல்வேறு குறும்படங்களையும், ஆவணப் படங்களையும் வெளியிடலாம். இதற்கு முயற்சிப்பவர்களுக்குத் தகுந்த ஊக்கமளிக்கும் உத்தரவாதத்தை தமிழக அரசு இம்மாநாட்டில் அளிக்கலாம்.

இந்தியாவின் வரலாற்றில் லெமூரியாவின் சிறப்பைக் கடுகளவும் குறையாமல் தெரியப்படுத்தும் வகையில் மத்திய அரசின் இந்திய வரலாற்று பாடப்பிரிவுகள் அமைய செம்மொழி மாநாட்டில் வலியுறுத்த வேண்டும்.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க விரும்பினால் அவர்களுக்கு பயணக் கட்டணத்தில் சிறப்புச் சலுகை அளித்து ஊக்கப்படுத்த உத்தரவிட வேண்டும்.

தற்போது திட்டமிட்டுள்ள அரங்கில் போதிய இடவசதி இல்லையென்றாலும், அதற்கென பிரத்யேக அரங்கில் மாணவர்களை அமரச் செய்து அங்கு அகன்ற திரைகளில் மாநாட்டு நிகழ்வுகளைப் பார்வையிட ஏற்பாடு செய்யலாம்.

மாநாட்டில் பதிவு செய்யப்படும் குறுந்தகடுகளை ஜூலை மாதத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கும் கல்வித்துறை மூலம் சுற்றுக்கு அனுப்பி, அறிஞர்களின் கருத்துகள் மாணவர்களிடம் சென்றடைய வழிவகை காண வேண்டும்.

நூறு ஆண்டுகளுக்கு முந்தைய கட்டடங்களையும், நிகழ்வுகளையும் கூட சில நாடுகள் மிகப்பெரிய பொக்கிஷமாகக்கூறி பராமரிப்பதோடு, உலகம் முழுவதும் கூறி பெருமைப்படுகின்றன. இச்சூழலில் ஆயிரங்களை கடந்து நிற்கும் நம் பழமை இளைய சமுதாயத்தைச் சென்றடையச் செய்வது மிகவும் அவசியமானதே.

தினமணி

தமிழகத்தில் புலிகளின் ஆயுதங்கள்: கியூ பிரிவுப் பொலிஸார் விசாரணை

இலங்கையில் விடுதலைப் புலிகள் பயன் படுத்திய ஆயுதங்கள், கடல் மார்க்கமாக தமிழகத்திற்குள் கடத்தி வரப்படுகின்றன எனக் கிடைத்த தகவலின்படி கியூ பிரிவுப் பொலிஸார் கடலோரப் பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



இராமநாதபுரம்,மார்ச் 25
இலங்கையில் விடுதலைப் புலிகள் பயன் படுத்திய ஆயுதங்கள், கடல் மார்க்கமாக தமிழகத்திற்குள் கடத்தி வரப்படுகின்றன எனக் கிடைத்த தகவலின்படி கியூ பிரிவுப் பொலிஸார் கடலோரப் பகுதிகளில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின் னர் அங்கு விடுதலைப் புலிகள் வைத்திருந்த ஆயுதங்கள் பல்வேறு இடங்களில் புதைக்கப்பட்டிருக்கின்றன எனவும், அவற் றைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிலர், முகவர்களின் உதவியுடன் தமிழகத்திற் குக் கடத்தி வருகின்றனர் எனவும் தகவல்கள் வந்துள்ளன.
இந்த ஆயுதங்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றனவா, தீவிரவாத செயல் களுக்கு பயன்படுகின்றனவா என்பது தெரி யாமல் பொலிஸாரும் குழப்பத்தில் உள்ளனர்.
இதுகுறித்து கியூ பிரிவு அதிகாரி ஒரு வர் கூறியவை வருமாறு
தமிழகத்திலிருந்து ஆயுதம் தயாரிக்கத் தேவையான பொருள்களை முன்பு இலங்கைக்குக் கடத்தினர். தற்போது இலங்கை யில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்களை இங்கு கடத்தி வருகின்ற னர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கீழக் கரையில் ஹவாலா பணத்துடன் பிடிபட்ட நபரிடம் கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் இலங்கையிலிருந்து வந்தவை எனத் தெரியவந்தது. மேலும் சிலர், இதுபோன்ற கடத்தலில் ஈடுபடுகின்றனர் எனத் தெரிகி றது. அவர்கள் குறித்து ரகசியமாக கண் காணித்து வருகிறோம். இங்கு எதற்குக் கடத் துகின்றனர் என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை என்றார்.

பொன்சேகா ஒரு முட்டாள்! - ராஜபக்சே

கோலாலம்பூர்: இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா ஒரு முட்டாள் என்று கூறியுள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சே.


பணியில் இருக்கும்போது அரசியலில் ஈடுபட்டது, ராணுவ விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக பொன்சேகா மீது ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக அதிபர் ராஜபக்சே சிங்கப்பூர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

பொன்சேகா ஒரு முட்டாள். 2009 நவம்பர் 16-ம் தேதி கொழும்புவில் அதிபர் அலுவலகத்தில் பொன்சேகா அமர்ந்திருந்தபோது அவரிடம் அதிபர் தேர்தலில் போட்டியிட அவருக்கு விருப்பமா எனக் கேட்டேன். எனினும் அவ்வாறு தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தமக்கு இல்லை என பொன்சேகா தெரிவித்தார். கடைசியாக அவர் என்னைச் சந்தித்தபோதுகூட இதுபற்றி என்னிடம் கூறவில்லை.

அரசியல் என்பது ராணுவம் அல்ல. ராணுவத்தில் நீங்கள் உத்தரவிட்டால் அதை மற்ற வீரர்கள் பின்பற்றுவார்கள். ஆனால் அரசியலில் நீங்கள் உத்தரவிட்டால் விளைவுகள் வேறுவிதமாக இருக்கும் என அவரிடம் எடுத்துக் கூறினேன்.

இந்த அரசியல் விளையாட்டு எனக்குத் தெரியும். என்னை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் நான்தான் வெற்றி பெறப் போகிறேன் என்பதையும் அவரிடம் தெரிவித்தேன்.

அவரைத் தேர்தலில் போட்டியிட விடாமல் செய்திருக்கலாம். நான் அனுமதிக்காதவரை அவர் ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற முடியாது. வேட்புமனுத் தாக்கல் முடியும்வரை அவரது ஓய்வுபெறும் கோரிக்கையை நான் தள்ளி வைத்திருக்கலாம். நான் பயந்துவிட்டேன் என மக்களால் சொல்லப்படுவதை நான் விரும்பவில்லை. எனவே அவரை தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதித்தேன்.

விடுதலைப்புலிகளுடான போரின் இறுதி நாள்களில் பொன்சேகா சீனாவில் விடுமுறையில் இருந்தார்.

அவரை முன்கூட்டியே மன்னிக்கும் திட்டம் எதுவும் இல்லை. நான் அவரை மன்னித்தால் ராணுவக் கட்டுப்பாடு என்னாவது? இது பிரிட்டிஷ் சட்ட விதிமுறை. நான் என்ன செய்ய முடியும். இந்தியாவிலும், இலங்கையிலும் பிரிட்டிஷ் சட்டவிதிமுறைதான் உள்ளது.

ராணுவ நீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான இலங்கை வீரர்களை பொன்சேகா அவராகவே கொண்டுபோய் நிறுத்தினார். ஒருகட்டத்தில் அதன் எண்ணிக்கை 8500 ஆனது. இதற்காக அவரைக் கடிந்துகொண்டு அந்த வீரர்களை விடுதலை செய்தேன்.

இந்தியாவின் அச்சுறுத்தல் இருப்பதால் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 200000-ல் இருந்து 450000 ஆக உயர்த்த வேண்டும் என பொன்சேகா விரும்பினார்.

இந்தியாவிடம் 1.5 மில்லியன் தரைப்படை வீரர்கள் உள்ளனர். இதுதவிர 1 மில்லியன் துணை ராணுவப் படையினர் உள்ளனர். எனவே 2.5 மில்லியன் வீரர்களுக்கு முன் 450000 வீரர்கள் என்ன செய்ய முடியும். எனவே வெளிநாடு குறித்த கவலையை என்னிடம் விட்டுவிடுங்கள் என அவரிடம் கூறினேன்.

ராணுவப் புரட்சி குற்றச்சாட்டு குறித்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து விவரங்களையும் விரிவாகக் கூற முடியாது. குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது போலீசார், பாதுகாப்புப் படையினரின் பணி. அவர்களை அதைச் செய்து வருகின்றனர்.

பொன்சேகா குற்றவாளியா, இல்லையா என்பது எனது கவலை அல்ல. எனினும் சட்ட விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படும்...." என்றார் அவர்.

அரசு பயங்கரவாதத்தை முதலில் நிறுத்துக

பழ. நெடுமாறன்

மாவோயிஸ்டுகளின் வன்முறை நடவடிக்கைகளை சில அமைப்புகள் நியாயப்படுத்தப் பார்க்கின்றன. ஆனால் மாவோயிஸ்டு, நக்சல்களுக்கு அறிவார்ந்த வகையிலும் மற்றும்பொருளாதார ரீதியிலும் ஆதரவு தெரிவித்து வரும் மெத்தப் படித்தவர்களும் இந்த வன்முறையை மிகக்கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் 16-2-10 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகள் போன்ற தீவிரவாத இளைஞர்கள் எங்கேயோ இருந்து வந்தவர்கள் அல்லர். அவர்களும் நமது சமுதாயத்தில் உருவானவர்கள். அவர்கள் ஏன் வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை எண்ணிப் பார்த்து, அந்தக் காரணங்களைச் சரிசெய்வதன் மூலம் இந்தப் போக்கைத் திருத்த முடியும். நோய் நாடி, நோய் முதல் நாடி மருந்து கொடுக்க வேண்டும்.

சமூக, பொருளாதாரப் பிரச்னையாக இந்தப் பிரச்னையைக் கருதி அவற்றுக்கான மாற்று நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். ஆனால் ப. சிதம்பரம் இதைச் சட்ட ஒழுங்குப் பிரச்னையாக மட்டுமே பார்க்கிறார். அவர் மட்டுமல்ல, அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் படைகளும், பல்வேறு மாநில அரசுகளின் காவல் படைகளும் அவ்வாறே பார்க்கின்றன. பயங்கரவாதத்தை ஒழிக்கப் போகிறோம் என்ற பெயரில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் அதிகரிப்பு, தங்குதடையில்லாத லஞ்ச ஊழல், சீரழிந்த நிர்வாகம், உளவு அமைப்புகளில் ஊடுருவிவிட்ட ஊழலின் விளைவாக அவைகள்அடைந்த தோல்வி, காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம், ஆளுங்கட்சி அரசியல்வாதிகள், அதிகாரிகள், சமூகவிரோதிகள் ஆகியோரது கூட்டணியின் தங்குதடையற்ற கொள்ளை, ஏழை, எளிய மக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுதல், வேலையில்லாத் திண்டாட்டம், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இன்மை போன்ற பல நடவடிக்கைகள்தான், படித்த இளைஞர்களிடையே விரக்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தி அவர்களை வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுக்க வைத்துள்ளன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மையாகும்.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் போலி மோதல்கள், காவல் நிலையக் கொலைகள், சிறைச்சாலை கொலைகள் போன்றவை அனைத்தையும் அதிகார வர்க்கம்சமூகத்தின் கண்முன்னால் மூடி மறைக்கிறது. காஷ்மீர், பஞ்சாப், நாகலாந்து, மணிப்பூர், அசாம், மிஜோரம், திரிபுரா போன்ற இமயமலை மாநிலங்களில் இந்திய ராணுவமும், துணைப் படைகளும் நடத்தும் மனிதநேயமற்ற அட்டூழியங்கள், கொடூரங்கள் ஆகியவை குறித்து வெளியாகும் செய்திகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. மணிப்பூரில் மனோரமா என்ற பெண்ணை அசாம் துப்பாக்கிப் படையினர் கூட்டாகச் சேர்ந்து பாலியல் கொடுமை செய்து அதனால் இறந்த அந்தப் பெண்ணின் உடலை வீதியில் வீசிய கொடூரத்துக்கு எதிராக மணிப்பூர் பெண்கள் அந்தப் படையினரின் அலுவலகத்துக்கு முன்னால் நிர்வாணப் போராட்டம் நடத்தி உலகை அதிர வைத்தார்கள். குஜராத் மாநிலத்தில் காவல் உயர் அதிகாரிகளின் துணையோடு சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகள், கலவரங்கள் நாகரிக சமுதாயத்தை வெட்கித் தலைகுனிய வைத்தன.

மோதல் சாவுகள் என்ற பெயரால் காவல்துறை தொடர்ந்து நடத்தி வரும் படுகொலைகள் அரசு நடத்தி வரும் பயங்கரவாதத்தின் வெளிப்படையான அடையாளங்கள் ஆகும். பயங்கரவாதத்தை ஒழிக்க அனைவரின் ஒத்துழைப்பை நாடும் ப. சிதம்பரம், ராணுவம், துணைப்படைகள், காவல் படைகள் நடத்தி வரும் அரச பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்துவது குறித்து என்றைக்காவது சிந்தித்ததுண்டா? நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மோதல் கொலைகள், காவல் நிலையக் கொலைகள், சிறைச்சாலைக் கொலைகள், இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் எடுத்த நடவடிக்கை என்ன? மோதல் கொலைகள் குறித்து உச்ச நீதிமன்றம் வகுத்த நெறிகாட்டுதலை பின்பற்றாத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்ததற்கு ஒரே ஒரு சான்றை உள்துறை அமைச்சரால் தர முடியுமா? மாறாக சட்டங்களைத் துச்சமாக மதித்துச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பல படி பதவி உயர்வும், விருதுகளும், பரிசுகளும் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படுகின்றன.

பொடா, தடா போன்ற மிகக்கொடிய சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் வாடிய என் மீதும் மற்றத் தோழர்கள் மீதும் இச்சட்டத்தைப் பயன்படுத்தியது தவறு என மத்திய அரசால் அமைக்கப்பட்ட பொடா மறுஆய்வுக் குழு தீர்ப்பளித்ததன் பேரில் இருண்ட சிறைகளில் இருந்து நாங்கள் வெளியே வந்தோம். ஆனால் பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, பொடா சட்டத்தின் கீழ் எங்களைச் சிறையில் அடைத்து, எங்களது மனித உரிமைகள் அத்தனையையும் பறித்த ஆட்சியாளர்கள், அவர்களின் ஏவல்படி எங்கள் மீது பாய்ந்த காவல் அதிகாரிகள் ஆகியோர் மீது இதுவரை ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இவ்வாறு பொடா சட்டத்தை அரசியல் நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தியவர்கள் மீது எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே ஏன்?

ஒரு நாள் கூட சிறை சென்றறியாத சிதம்பரத்துக்குச் சிறைவாசக் கொடுமை என்ன என்பது புரியாது. செய்யாத குற்றத்துக்காகப் பல மாதங்கள் சிறையில் வாடியவர்களின் குடும்பத்தினர் எத்தகைய மனத்துன்பத்துக்கும் இழப்புகளுக்கும் ஆளாகியிருப்பார்கள் என்பதை சிதம்பரம் போன்றவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது.

வெள்ளையரின் போலீஸ் தடியடிக்கு தனது வயது முதிர்ந்த தாயான சொரூபராணி அம்மையார் ஆளானதை எண்ணி தான் துடித்துப் போனது குறித்து ஜவாஹர்லால் நேரு எழுதியிருப்பதையும், தனது தந்தையும், அத்தைமார்களும் சிறை சென்றபோது, சிறுமியான தான் தனித்து நின்று தவித்தது குறித்து இந்திரா காந்தி எழுதியிருப்பதையும் ப. சிதம்பரம் போன்றோர் படித்தால்தான் பாதிக்கப்பட்டவர்களின் வேதனையை ஒருசிறிதளவாவது புரிந்து கொள்ள முடியும்.

1912-ம் ஆண்டில் வெள்ளையர் ஆட்சியின் போது சுதந்திரப் போராட்டத்தை நசுக்குவதற்காக "ரௌலட் சட்டம்' என்ற கொடிய சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜாலியன் வாலாபாக்கில் கூடிய கூட்டத்தின் மீது வெள்ளை ராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டது.நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தார்கள். ஜாலியன் வாலாபாக் படுகொலை என்னும் இந்த நிகழ்ச்சி தான் சுதந்திரப் போராட்டத்தை உத்வேகப்படுத்தியது. இந்த "ரௌலட் சட்ட'த்துக்கு எதிராகத்தான் காந்தியடிகள் தனது முதல் போராட்டத்தைத் தொடங்கினார். ஆனால் சுதந்திர இந்தியாவில் ரௌலட் சட்டத்தை மிஞ்சும் பல சட்டங்கள் இருந்தன. இன்னும் நடைமுறையில் இருக்கின்றன.

பல கொடிய சட்டங்கள் இருந்தும்கூட, பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாதது ஏன் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மக்களின் எதிர்ப்புக்கிணங்க பொடா சட்டம் திரும்பப் பெறப்பட்டபோதிலும் கூட அச்சட்டத்திலிருந்த பல கொடுமையான பிரிவுகளை, சிறு திருத்தங்களுடன் உள்ளடக்கி சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புத் திருத்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பட்டமான மனித உரிமை பறிப்புச் சட்டம் இது. சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்கு அல்லது அவர்களை மிரட்டி அடக்கி வைப்பதற்குப் பதவி வெறிகொண்ட அரசியல்வாதிகளுக்கும், காவல்துறைக்கும் இந்தச் சட்டம் மிகமிக உதவும்.

ஐ.பி., ரா, சி.பி.ஐ. போன்ற மத்திய உளவு நிறுவனங்கள் உள்ளன. ஆனால் இவை போதாது என்று தேசிய புலனாய்வு அமைப்பு ஒன்றை ப. சிதம்பரம் அமைத்துள்ளார். அதற்கு அளவு கடந்த அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், 13-12-2008 அன்று தில்லியில் நடைபெற்ற சர்வதேச நீதிபதிகள் மாநாட்டில் பேசும்போது பின்வருமாறு குறிப்பிட்டார்:

பயங்கரவாதத் தாக்குதல்களைப் பயன்படுத்தி தனி நபர்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பறிப்பதை நியாயப்படுத்த முயற்சி நடைபெறுகிறது. பயங்கரவாத வளர்ச்சியைத் தடுப்பதற்குப் பதில் சந்தேகப்பட்டவர்களைக் காலவரம்பின்றி சிறையிலடைத்தலும், விசாரணை என்ற பெயரால் சித்திரவதை செய்தலும், நியாயமான விசாரணை நடப்பதை மறுப்பதும் நடைபெறுகின்றன.

பயங்கரவாத தாக்குதல்களின் பின்விளைவாக மக்கள் மீது கட்டுப்பாடுகளும், கண்காணிப்புகளும் விதிக்கப்படுகின்றன. மக்களின் குடியேற்றத்துக்கு நியாயமற்ற கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படுகின்றன. பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த முனையும்விசாரணை அமைப்புகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் தேவையற்ற நடவடிக்கைகளை நீதித்துறை மேற்கொள்கிறது என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. இவ்வாறு கூறுபவர்கள்நமது குற்றவியல் மற்றும் சாட்சியம் அளிக்கும் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்று கூறுகிறார்கள். யாரையும் நீண்ட காலத்துக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறை வைக்க வேண்டும் என்றும், காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை நீதிமன்றங்கள் ஏற்கவேண்டும் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.இது குறித்து நாடாளுமன்றந்தான் முடிவெடுக்க வேண்டும். ஆனாலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு வழங்கியிருக்கும் தனிநபர் சுதந்திரத்தைப் பறிக்கும் எந்த நடவடிக்கையிலும் யாரும் ஈடுபடக்கூடாது''.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கூறியிருக்கும் இந்தக் கருத்துக்கு மாறாக உள்துறை அமைச்சர் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார். அதற்கு மக்கள் ஆதரவு தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

பிரதமர் பதவிக்கு அடுத்த நிலையில் உள்ள மிகமுக்கியமான பதவி உள்துறை அமைச்சர் பதவி ஆகும். இந்தியா சுதந்திரம் பெற்றபோது பிரதமராக ஜவாஹர்லால்நேருவும் உள்துறை அமைச்சராக வல்லபாய் படேலும் பொறுப்பேற்றனர். அவருக்குப் பின்னர் ராஜாஜி, பண்டித கோவிந்த வல்லப பந்த் போன்ற மிக மூத்த தலைவர்கள் உள்துறை அமைச்சர் பொறுப்பைத் திறம்பட வகித்தனர். இத்தகைய அறிவாற்றல் மிக்க தலைவர்கள் அமர்ந்த நாற்காலியில் ப. சிதம்பரம் அமர்ந்திருக்கிறார். அந்தத் தலைவர்கள் அமர்ந்த நாற்காலியில் அமர்ந்திருப்பதனாலேயே அந்தத் தலைவர்களுக்குத் தான் சமமாகிவிட மாட்டோம் என்ற உணர்வு ப. சிதம்பரத்துக்கு எப்போதும் இருக்க வேண்டும். அந்தத் தலைவர்கள் கடைப்பிடித்த நிதானம், நிர்வாகத்திறமை, மக்களை மதிக்கும் தன்மை ஆகிய நற்பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும். செஞ்சிக் கோட்டை ஏறியவரெல்லாம் தேசிங்கு ராசனாகிவிட முடியாது.

இணையதளத்தில் சீரழிக்கப்படும் தமிழ் எம்.​ சரவணன்

சென்னை, ​​ மார்ச் 24:​ இணையதளத்தில் எழுதுபவர்களால் தமிழ் சீரழிக்கப்படுவதாக தமிழ் ஆர்வலர்களும்,​​ பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இன்றைய நவீன உலகில் இணையதளம் என்பது வாழ்க்கையின் ஓர் அங்கமாகி விட்டது.​ எதில் எந்த சந்தேகம் வந்தாலும் உடனடியாக எல்லோரும் இணையதளத்தையே நாடுகின்றனர்.

தொடக்க காலத்தில் இணையத்தில் ஆங்கிலம் மட்டுமே இருந்தது.​ தமிழ் உள்பட பிற மொழிகளை இணையத்தில் காண்பது அரிதாகவே இருந்தது.​ இப்போது தமிழ் உள்பட எந்த மொழியிலும் எழுதுவதற்கும்,​​ படிப்பதற்கும் புதிது புதிதாக மென்பொருள்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இணையதள தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவும் தமிழில் வரத் தொடங்கியுள்ளது.​ அதனால் தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் கூட இணையம் மூலம் தேவையான தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது.தமிழில் ஏராளமான இணையதளங்கள் உள்ளன.​ தினமும் பல தளங்கள் தமிழில் வந்து கொண்டிருக்கின்றன.​ அரசுத் துறைகள்,​​ நிறுவனங்கள்,​​ அரசியல் கட்சிகள்,​​ அமைப்புகள் மட்டுமல்லாது பல தனி நபர்களும் தங்களை இணையதளம் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

சிற்றிதழ்கள் மூலம் தங்களை மெல்ல மெல்ல எழுத்தாளர்களாக வளர்த்துக் கொண்டவர்கள் இன்று இணையதளம் மூலம் வாசகர்களை வலைவீசி பிடித்து வருகின்றனர்.​ எஸ்.​ ராமகிருஷ்ணன்,​​ ஜெயமோகன்,​​ சாரு நிவேதிதா,​​ மனுஷ்யபுத்திரன் போன்றவர்களின் இணையதளங்கள் பிரபலமாக உள்ளன.

இணையத்தில் தமிழ் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அதில் எழுதுபவர்களால் தமிழ் சீரழிக்கப்படுகிறது என்று பெரும்பாலானவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.இணையத்தில் ஒரு தகவலைப் பெற விரும்பினால் அனைவரும் கூகுள் தேடு பொறியை நாடுகின்றனர்.​ அதன் மூலம் தேவையான தகவல்களை பெறுகின்றனர்.​ ஆனால் கூகுள் தேடு பொறியில் ஏதாவது தமிழ் எழுத்தை தட்டினால் அது பட்டியலிடும் செய்திகள் 90 சதவீதம் ஆபாசம் நிறைந்தவைகளாக உள்ளன.அம்மா -​ மகன்,​​ அப்பா -​ மகள் போன்ற வார்த்தைகளை இட்டு தேடினால் கூட ஆபாசக் கதைகளே வருகின்றன.​ அந்த அளவுக்கு இணையத்தில் தமிழ் ஆபாசக் கதைகள் நிறைந்துள்ளன என்று பலரும் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் ஆபாசக் கதைகள் இருந்தாலும் தமிழ் அளவுக்கு இல்லை.​ அப்பா -​ மகள் போன்ற தலைப்புகளில் கூட ஆபாசக் கதைகள் இருப்பதால் அதனைத் தடுக்கவும் வாய்ப்பில்லை.​ இது போன்ற கதைகளை படிப்பதால் இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் ஒருவித மனக்குழப்பத்துக்கு ஆளாகிறார்கள் என்கிறார்கள் டாக்டர்கள்.

எனவே இதுபோன்ற விஷயங்களையும் சைபர் கிரைம் போலீஸôர் கண்காணிக்க வேண்டும்.​ அதுபோல தமிழில் 'பிளாக்' எழுதுபவர்கள் தனி மனித தாக்குதல்களிலும்,​​ மதங்களை இழிவுப்படுத்தி எழுதியும் வருகின்றன.​ பல நேரங்களில் இவர்கள் எழுத்துக்கள் மூலம் மோதி வருகின்றனர்.​ இதனால் சமூக அமைதி குலையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.எனவே சைபர் கிரைம் போலீஸôர் இணையத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தினமணி

போலி மருந்துகள்: மக்கள் உஷார் அடைவது எப்படி? மருத்துவ நிபுணர் யோசனை

சென்னை, ​​ மார்ச் 24: போலி-காலாவதியான மருந்துகளை பொது மக்கள் தவிர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று நெஞ்சக நோய் மருத்துவ நிபுணர் ​ ​செ.நெ.​ தெய்வநாயகம் கூறினார்.

​ ​ உடல் நலக் குறைவு ஏற்படும் நிலையில் மருத்துவரின் பரிந்துரையின்றி நேரடியாக மருந்துக் கடைக்காரரிடம் மருந்து வாங்கிச் சாப்பிடாமல் இருத்தல்,​​ நோய்க்கான காரணத்தை மருத்துவரிடம் ​ முழுமையாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல்,​​ சிகிச்சைக்கு டாக்டர் பரிந்துரைக்கும் மாத்திரைகள் குறித்த விவரம்,​​ பிரபலமான-தரமான மருந்துக் கடைகளில் மட்டுமே மருந்துகளைத் தொடர்ந்து வாங்குதல்,​​ உடனடியாக நிவாரணம் ​பெற நினைத்து அதிக அளவுக்கு மருந்துகள் சாப்பிடுவதைத் தவிர்த்தல் ஆகியவற்றை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

​ ​ இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

​ ​ ''வைரஸ்,​​ பாக்டீரியா காரணமாக ஜலதோஷம் ஏற்பட வாய்ப்பு உண்டு.​ வைரஸ் காரணமாக மூக்கு,​​ சைனஸ்,​​ தொண்டைப் பகுதியில் ஏற்படும் ஜலதோஷம் மருந்துகள் ஏதும் இன்றி இயல்பாக சரியாகி விடும்.​ குறிப்பாக குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ஆறு முறை இத்தகயை ஜலதோஷம் ஏற்படுவது இயல்பானது.​ ஆனால்,​​ பயம்-அறியாமை காரணமாக பல பெற்றோர் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை குழந்தைக்குக் கொடுத்து குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்.

​ ​ மார்புச் சளி,​​ ஒவ்வாமைச் சளி ஆகியவற்றுக்கு சிகிச்சை தேவைப்படும்.​ இத்தகைய சளி பச்சை அல்லது மஞ்சள் நிறமாக இருக்கும்;​ துர்நாற்றமும் இருக்கும்.​ சிகிச்சை தேவைப்படும் நிலையில்,​​ குடும்ப மருத்துவரின் பரிந்துரையுடன் முதல் கட்டமாக வீரியம் குறைந்த ​குறைவான எண்ணிக்கையிலான மாத்திரைகளைச் சாப்பிட்டால் போதுமானது.

​ ​ பிரச்னை தொடர்ந்தால் மட்டுமே ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.​ மேலும் மாத்திரைகளின் தன்மை குறித்து மருத்துவரிடம் முழுமையாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் உரிமை தங்களுக்கு உள்ளது என்பதை நோயாளிகள் உணர வேண்டும்.

சித்த மருத்துவம் இருக்க கவலை ஏன்?​ அலோபதி மருத்துவத்தைப் போல் அல்லாமல்,​​ பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாத நல்ல சித்த மருந்துகள் உள்ளன.​ ஜலதோஷம்,​​ சர்க்கரை நோய்,​​ நரம்புத் தளர்ச்சி,​​ மூட்டு வலி என எல்லாவற்றுக்கும் சித்த மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளன.

​ ​ தாளிசாதி சூரணம் ​(தூள்),​​ சிவனார் அமுதம் ​(தூள்),​​ தூதுவளை லேகியம் ​ஆகிய சித்த மருந்துகள் சளியைப் போக்கும் ஆற்றல் படைத்தவை.​ ஜலதோஷத்துடன் இருமலும் இருந்தால் ஆடாதொடை மணப்பாகு ​(சிரப்)​ உதவும்.​ இதேபோன்று மதுமேக சூரணம் உள்ளிட்ட மருந்துகள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கு நிவாரணம் தரும்.​ அமுக்கரா,​​ பிரம்மி,​​ வல்லாரை மாத்திரை ஆகியவை நரம்புத் தளர்ச்சியைப் போக்க உதவும்'' என்றார் டாக்டர் தெய்வநாயகம்.

தினமணி