இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 டிசம்பர், 2009

ஓஷியானிக் வைக்கிங் கப்பலில் உள்ள அனைவரும் அகதிகளே - ஐ.நா [December 16, 2009, 07:59:21 AM London]


இந்தோனேசியக் கடலில் நின்று போராடியபின் அந்நாட்டின் தரையிறங்கி தடுப்பு முகாம்களிலுள்ள 78 இலங்கையரும் உண்மையில் அகதிகளே என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையகம் (யு.என்.ஹெச்.சி.ஆர்) அறிவித்துள்ளது. இரு மாதங்களாக தமது கப்பலான ஓஷியானிக் வைக்கிங்கை விட்டு இறங்க மாட்டோம் எனக் கூறி போராட்டம் நடத்திய மக்களுக்கு அவுஸ்திரேலியா கொடுத்த வாக்கை அடுத்து அவர்கள் கரையிறங்கியிருந்தனர். ஆனால் இனி யு.என்.ஹெச்.சி.ஆர் தான் இவர்கள் பற்றி முடிவெடுக்கவேண்டும் என அவுஸ்திரேலியா கூறியுள்ள நிலையில், மேற்படி 78 பேரும் அகதிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே இவர்கள் அனைவரும் விரைவில் அவுஸ்திரேலியா அழைத்துச் செல்லப்படுவர் என நம்பப்படுகிறது. எனினும் இம்மக்கள் தம்மை அகதிகள் என நிரூபிப்பதற்காக இவ்வளவு சிரமம் எடுக்க வேண்டி வந்ததையிட்டு சில நிறுவனங்கள் தமது கவலையையும் வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையில் நேற்று இரவும் அகதிகளுடன் சென்ற படகொன்றை அவுஸ்திரேலிய கடற்படையினர் இடைமறித்துள்ளனர். 51 பேருடன் சென்ற இப்படகானது ஆஷ்மோர் தீவுகளுக்கிடையில் மறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஆளடையாள விசாரணை மற்றும் மருத்துவ சோதனைகளுக்காக கிறிஸ்ட்மஸ் தீவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக