
வேலையில் மனம் செல்லவில்லை.
கைவசம் கொஞ்சம் ஓய்வு சேரமும் இருக்கிறது.
ஆனால் வலையில் உலாவவோ செய்திகளை படிக்கவோ ஆர்வமில்லை.இப்போது உற்காகமாக பொழுதை கழிக்க வேண்டும் என்றால் கிளாசிக்ஆன்லைசினிமா இணையதளத்திற்கு சென்றீர்கள் என்றால் ஹாலிவுட் படங்களை பார்த்து ரசிக்கலாம்.
டவுண்லோடு செய்ய வேண்டிய தேவை எல்லாம் கிடையாது.முகப்பு பக்கத்தில் வரிசையாக உள்ள படங்களில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்தால் போதும் தனி விண்டோவில் படம் ஓடத்தஒடங்கிவிடும்.
தற்போது இணையவாசிகளால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் படங்கள் பிராதனமாக அவற்றின் போஸ்ட்டரோடு பட்டியலிடப்பட்டுள்ளன.
வேறு படங்கள் தேவை என்றால் தனிதனித்தலைப்புகளில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.விருபிய படத்தை தேடுவதற்கான தேடல் வசதியும் உள்ளது.
இணையவாசிகளின் பரிந்துரைகளும் இடம் பெற்றுள்ளன.நீங்கள் இந்த தளத்தில் இல்லாத எதாவது ஒரு படம் தேவை என்று கருதினால் அது பற்றியும் தெரிவிக்கலாம்.கூகுல் வீடியோ மற்றும் மெட்டாகேஃப் போன்ற தளங்களில் கானக்கூடிய படங்கள் தான் என்றாலும் அவற்றை ஒரே இடத்தில் சுலபமாக தேடக்கூடிய வகையில் தந்திருப்பதே இதன் சிறப்பு.
வடிவமைப்பு கொஞ்சம் குழப்பக்கூடியது என்றாலும் திரைப்பட ரசிகர்களூக்கு இந்த தளம் நிச்சயம் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
——–
link;
http://www.classiccinemaonline.com/1/index.php
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக