இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 டிசம்பர், 2009


» ஈழத்தமிழர் அதிரடித் தயாரிப்பில் "நிலா", "விடியல்" திரைப்படங்கள்!

ஈழத் தமிழர்களால் தமிழ்நாட்டு மண்ணில் தயாரிக்கப்பட்ட விடியல் மற்றும் கனேடிய மண்ணில் தயாரிக்கப்பட்ட நிலா ஆகிய திரைப்படங்கள்


 டிசெம்பர் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் திரையிடப்படவிருகின்றன. அனைத்து கனேடியத் தமிழ் மக்களும் இந்த திரைப்படங்களை பார்த்து ஈழக் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டு மென கனேடியத் தமிழ் திரைப்படக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

விடியல் திரைப்படம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மண்ணில் கனேடிய ஈழத்துக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தில் மனோ, சுதா, கவிதா மற் றும் இயக்குநர் தரன் மற்றும் தமிழ்நாட்டுக் கலைஞர்களும் நடித்துள்ளனர்.  திரைப்படத்தின் பாடல்களை தமிழ்நாட்டு பாடலாசிரியர் காதல்மதி, இயக்குநர் தரன் ஆகியோர் எழுதியுள்ளனர். நிலா திரைப்படம் முழுக்க முழுக்க கனேடிய மண்ணிலேயே தயாரிக்கப்பட்டது. நிலா திரைப்படத்தில் சுதன், நவநிதா, ருபா, வினோத், விஜய், மாலன், சூரி, ராஜா, சங்கர், ஜிவன், உதயன், ராணி இவர்களு டன் இயக்குநர் தரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு இசையமைப்பை அண்மையில் தமிழினப் படுகொலையைப் பற்றி "இதுவே.. இதுவே.. நிலையா...." என்ற பாடலை வெளியிட்ட கனேடிய இசையமைப்பாளர் சிறீஜி வன் பாடல்கள் எழுதி இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை தமிழ்நாட்டில் உள்ள தொழில் நுட்பக் கலைஞர் பன்னீர் செல்வம் மற்றும் படத்துக்கு பின்னணிக் குரலை தமிழ்நாட்டுக் கலைஞர்கள் சினிமாத் தமிழில் பேசியுள்ளனர்.           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக