இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 டிசம்பர், 2009

பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா!

பல்(சரை)ஸை 'எகிற' வைக்கும் யமஹா!

மோட்டார் சைக்கிள் மார்க்கெட்டில் எக்கச்சக்கமான புதி வண்டிகள் வந்தாலும் பல்சர்தான் இன்னும் ஹாட் ஸ்பாட்டில் நிற்கிறது. மார்க்கெட்டில் தங்கள் முன்னிலையைத் தக்க வைத்துக் கொள்ள பஜாஜ் நிறுவனம் தொடர்ந்து பல்சரின் என்ஜின் திறனை 150, 180, 200 மற்றும் 220 சிசி என ஏற்றிக் கொண்டே வருகிறது.

மணிக்கு 144 கிமீ வேகத்தில் சர்வ சாதாரணமாகப் பறக்க முடியும் பல்ஸர் 220 பைக்கில் (சாலை வசதி இருந்தால்!).

இப்போது அதற்கு செக் வைக்க வருகிறது யமஹா.

யமஹா நிறுவனம் தனது 'ஃபேஸர்' (Fazer) பைக்கின் தரத்தை மேம்படுத்தி புதிய பைக்கை அறிமுகம் செய்கிறது. இந்த வண்டியில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்ய முடியுமாம். நான்கே வினாடிகளில் 60 கிலோமீட்டர் வேகமெடுக்கும் ஆற்றல் கொண்டதாக இந்த புதிய வண்டியை டிசைன் செய்துள்ளார்களாம். ஏற்கெனவே யமஹாவின் ஆர் 15 மணிக்கு 140 கிமீ வேகத்தில் பறப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம் ஹீரோ ஹோண்டா நிறுவனம் தனது கரிஸ்மா மாடலை மேம்படுத்துவதில் மும்முரமாகிவிட்டது. கரிஸ்மா இப்போது மணிக்கு 125 கிமீ வேகத்தில் செல்கிறது. இந்த மேம்படுத்தபப்பட்ட கரிஸ்மா 138 கிமீ வரை செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் என்கிறார்கள். ஆனால் இந்த வேகம் குறித்து இதுவரை வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை ஹீரோ ஹோண்டா. காரணம் தனது போட்டியாளர்களைக் கூர்ந்து கவனித்த பிறகே இறுதியில் வேகத்திறன் பற்றிய விவரங்களை வெளியிடும் தன்மை கொண்டவர்கள் ஹீரோ ஹோண்டா நிறுவனத்த்தினர். இதனால் கடைசி நேரத்தில் மணிக்கு 150 கிமீ வேகம் என்று கூட அறிவிக்கக் கூடும்.

எனவே இப்போது மார்க்கெட் லீடராக உள்ள பல்சரின் அந்தஸ்தை எப்படியும் எட்டிப் பிடித்துவிடும் வேகத்தில் பல புதுமைகளைச் செய்துவருகின்றன யமஹாவும் ஹீரோ ஹோண்டாவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக