இந்த வலைப்பதிவில் தேடு

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

இணையத்தளங்கள் மீது தாக்குதல் நடத்த சீனாவிலிருந்து நிபுணர்கள் குழு வருகை

அரசின் நாச வேலைகள் குறித்து உண்மைகளை அம்பலப்படுத்தும் இணையத் தளங்களையும் அரச எதிர்ப்புப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் இணையத்தளங்களையும் சைபர் தாக்குதல் மூலம் செயலிழக்கச் செய்வதற்கு அரசாங்கம் முயன்று வருகிறது.

இதன் ஒரு கட்டமாக இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த சீன நிபுணர் குழுவொன்று சிறிலங்காவிற்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரசித்தி பெற்ற கூகிள் நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொண்டு சீனாவில் அவற்றைச் செயற்படாமல் தடுத்த சீன நிபுணர்களே இவ்வாறு சிறிலங்காவிற்கு வந்துள்ளனர்.

இணையத்தளங்களைத் தடைசெய்யும் நோக்கம் எதுவும் இல்லை என்று அரசு கூறி வந்த போதிலும் திரைமறைவில் இந்த நடவடிக்கைகள் துரித கதியில் நடந்து வருவதையே சீன நிபுணர்களின் வருகை உணர்த்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக